திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
ஆறாதாரவகை இந்திரிய விவரம்.
அடையாளஞ்சொல்லுகிறேன்- ஆண்டையேகேளீர்
அடையாளஞ்சொல்லுகிறேன்.
📖 பாடல் எண்: (0119) 📖
தோத்திரமாவது வாக்குடன்சட்சுவுஞ்
சிங்குவையாக்கிராண மைந்தையுங்கூட்டிப்
பாத்திரமான செவியுமுடம்புகள்
பாங்கான நாக்கதுமூக்குமேயாச்சுது
சத்தபரிசமும்ரூப ரசகெந்தஞ்
சார்வாகுமீதொரு வைந்துமேயாச்சுது
சித்தமுங்கேள்வி சுகதுக்கரூபங்கள்
சேர்ந்த வறுசுவைநாவதுமேருசி- அடை.
📖 பாடல் எண்: (00120) 📖
சந்தனங்கெந்தஞ் சவ்வாதுபனிநீர்
சாந்துபுனுகு களபகஸ்தூரியும்
சிந்தைமகிழவே கண்டுகளிக்குஞ்
செழுந்திருநாசி சுகதுக்கநித்திரை
பைந்தமிழ்வாக்குடன் பாணியும்பாயுரு
பாங்காயுபஸ்தமைந் தாச்சுதுபாகமாய்
அந்தமுங்கால்பரபான முந்தாரணை
யைம்புலனாவலும் லிங்கமிதாண்டையே- அடை.
📖 பாடல் எண்: (0121) 📖
வசனங்கமன ந்தானவிசர்க்கம்
வாழுமேயானந்த மைந்திதுங்கூடியே
நேசமும்வார்த்தை நடக்கைக்கொடுக்கும்
நீருமலமுமாதாரமீ தாச்சுது
நேசமனபுத்தியாங்கார சித்தமு
நேராயிதுநாலு நின்றுநடக்கையால்
ஓசைநினைத்திடும் புத்திவிசாரிக்கு
மோங்காரக்கோபமுஞ் சித்தம்பொருந்திடும்-அடை.
📖 பாடல் எண்: (0122) 📖
உருவமுங்கொண்டு வுலகெங்குஞ்சுற்றி
யுழன்றுவுழன்று வுணர்ந்துதவிப்பதும்
அறிவொன்றுழன் றுமேயாக தத்துவமு
மையாறு முப்பதுமெய்யாகக்காட்டியே
கருவிலமைத்ததின் காரணசற்குரு
காட்டியதத்துவக் கட்டளையின் படி
திருவுருஞான சிவசத்தியம்பிகை
சின்மயசுரூப சிரோமயமாமது- அடை.
விருத்தம்
📖 பாடல் எண்: (0123) 📖
கங்கையெனுங் கதிர்மதியுந் தரித்த சோதி
கனகரத்ன மானுடனே மழுவு மேந்தி
பங்கையமா மறுகுதும்பை கொன்றை சூடிப்
பதினாறு கலையணிந்த மூலந் தன்னில்
திங்களெனும் புவனமெல்லா நிறைந்த சோதி
திரிபுர த்தைக் கனலாக வெரித்த வீசன்
செங்கநதி யென்றுதிரு மூலந் தன்னில்
செனித்தெழுந்த கருவியெல்லாஞ் செப்பு வேனே.
📖 பாடல் எண்: (0124) 📖
பூதாதி யைந்துநின்ற புகழுஞ் சொன்னேன்
புலனைந்தும் விபரமதாய்ப் பொறியுஞ்
சொன்னேன்
சூதான கர்மவிந் திரியஞ் சொன்னேன்
சுகஞான விந்திரிய மைந்துஞ் சொன்னேன்
தீதான அந்தக்கரண நாலுஞ் சொன்னேன்
தெளிவான ஜெக நாத ரருளி னாலே
ஆதரவாய் நின்றதச வாய்வுஞ் சொன்னே
னதுகடந்து வறிவதற்கு வருள்செய் வேனே.
📖 பாடல் எண்: (0125) 📖
உணவறிந்து நினைவறிந்து வுணர்ச்சி கண்டு
உள்ளறிந்து புறமறிந்து வுரிசை கண்டு
மனமறிந்து மதியினின்று மகிழ்ச்சி பெற்று
வசனமெனுங் கேள்வியதின் வாய்மை கேட்டுக்
குணமறியா தாசையினா லழிந்து நின்று
கூர்ந்துமன மெழுந்துவொரு கருமஞ் செய்து
நினைவுதவ றாமலொன்றாய்ப் படைத்து நின்றேன்
நிகருடைய தத்துவமுப் பதுஞ்சொன் னேனே.
📖 பாடல் எண்: (0126) 📖
சொன்னவகை தொகையறிந்து சொல்பே தங்கள்
சொல்லவில்லை தசநாடி தசவாய் வுந்தான்
இன்னமொரு வகையறுபத் தாறுஞ் சொல்ல
விவர்கள் நின்ற நிலைசொல்ல வீடுஞ் சொல்ல
விண்ணம்வரா திவர்கள்செய்யுந் தொழிலுஞ்சொல்ல
வேதாந்த மறியாத முடிவுஞ் சொல்ல
அன்னையெனு மம்பிகைப்பெண் ணருளி னாலே
யவதரித்து நின்றநிலை யருள்செய் வோமே.
கொச்சகம்
📖 பாடல் எண்: (0127) 📖
மருவுதிருப் பொற்கமலம் வல்லபைதன் வீட்டிலொரு
கருவுருவா யைம்பூதங் கலந்தே யொருபுறமாய்
அருவுருவாய் நாதவிந்து அறுகுநுனி மேற்பனிபோல்
மருவியைம்பத் தோரெழுத்தில் வந்தவகை சொல்வேனே.
📖 பாடல் எண்: (0128) 📖
தாங்கிநின்ற மூலமதில் தானுமொரு வீடுகட்டி
வாங்கிநின்று வட்டமிட்டு மாறியிரு காலாக
ஓங்கி முளைத்ததுதா னொன்றே கொழுந்தாகி
நீங்காமல் நின்றகா ணெல்லிக் கனியாச்சே.
📖 பாடல் எண்: (0129) 📖
சத்தி யுதித்ததிருச் சன்னிதியின் முன்பாக
முத்திதரு மெய்ஞ்ஞான மூவரனுக் கிரகமதால்
சுத்தியொரு பந்தலிட்டுச் சூழ்ந்ததச வாய்வுகம்பாய்ப்
பத்திபடர்ந் ததுகாண் பதினாலு லோகமதாய்.
கலித்துறை
📖 பாடல் எண்: (0130) 📖
மாறிக் கலைகொண்டு வம்பர வீதியின் வட்டமதில்
தேறித் தெளிந்து வளைத்துக்கொண் டேன்தச வாயுவைத் தான்
ஊறி நடக்கின்ற பானத்தின் வாசி நுனிபிறழா
ஊறிக் கருவி லுறவாகி நின்று வுதிக்கின்றதே.
📖 பாடல் எண்: (0131) 📖
சாதியுங் கண்டுகுல மேவகுத் திந்தத் தாரணியில்
வாதிகள் தள்ளி வழக்குரைப் பார்மனு நீதிகண்டு
நீதியும் வேதநிலை கண்டுரைத்த நேர்வீட்டுக்குள்ளே
சோதியைக் கண்டு வுறவாகி நின்று துலங்கினனே.
வெண்பா
📖 பாடல் எண்: (0132) 📖
அத்தி புரத்தி லருகிருந்த தாக்கையது
சத்திசிவ நாதவிந்து தான்கூடி- விந்ததுமே
மூலக் கருக்குழியில் முச்சந்தி வீதிவளர்
பாலகனா யுற்பவிக்கும் பார்.
📖 பாடல் எண்: (0133) 📖
குருலிங்க சங்கமது கூறுமறு கோணவரை
இருமென் றழைத்து விருந்தங்கு- உருவாகி
நின்றறுபத் தாறு நிறைந்த கருவியெல்லாம்
கொண்டமைந்த வாறதனைக் கூறு.
📖 பாடல் எண்: (0134) 📖
ஈச னுறவாகி யெங்குஞ் செனித்திருந்த
நேசமது சாதிலிங்க நேர்மையைக்- கோசமது
நாதவிந் துற்பவமே நானறிந்து ஞானவெட்டி
பேதமில்லை சாதிகுலம் பேசு.
தசநாடி முறை
ஆறாதாரவகை இந்திரிய விவரம் தரு
விபரஞ்சொல்லுகிறேன்- தசநாடி-விபரஞ்சொல்லுகிறேன்.
📖 பாடல் எண்: (0135) 📖
விவரஞ்சொல்லுது மிடைபிங்கலைசுழி
மேவுமத்திச் சிங்குபுருஷன் காந்தாரியும்
அம்பலம்புருடன்கு குதன்சங்குனியு
மாகத்தசநாடியை யிரண்டாண்டையே
இபரம்பெருவிரல் மேலுமிடைகலை
யின்பம்வலதுபெருவிரல்பிங்கலை
சுபரஞ்சுடரொளி மேலுமோங்காரமாய்ச்
சுற்றியேநிற்குஞ் சுழிமுனையாண்டையே- விபரஞ்.
📖 பாடல் எண்: (0136) 📖
மூலச்சுழிதனிலே முனைத்தாக்கையு
மீறியேபெருநாடி யுயர்ந்துடன்
மேலைச்சிரமகமேரு முடிவளர்
விற்புனமுங் கருவுற்பனஞ்சொல்வேனான்
கால்கொண்டு நாழிகலைகொண்டு வாய்வதுங்
காரணமாகவே கண்டமதாய்வளர்
வேல்கொண்டுமே குழல்கொண்டுடன் மூலமே
வித்தாய்முளைத்தொரு பத்திதுநாடிகாண- விபரஞ்.
📖 பாடல் எண்: (0137) 📖
கண்டமதுநரம்பான குழைதனில்
காந்தாரிநின்று கலந்துநீர்பாய்ந்திடில்
அண்டமதிலத்தி சிங்குவைத்தானு
மவற்றையு நாலுமறிவிப்பதாகுமே
நின்றிடுஞ் சிங்குவையப்பதுவின்மயம்
நின்றநிறமது வுப்பதுவேசலம்
விண்டலம்புருடனிரு கண்ணளவு
மேவுங்காந்தாரியிங்கா தளவாண்டையே- விபரஞ்.
📖 பாடல் எண்: (0138) 📖
அத்தியுநின்றதது வலபாரிச
மானதளவா யமைத்தளவாய்பிர்ம
வித்தையுமாருயிரைம் புலனாதிகள்
வேதங்களோது மேலுந்தாள்வாயினி
சுத்திநிற்குஞ் சுகாதீதசங்குனி
சுந்தரலிங்கஞ் சுகந்ததாள்பாரிசம்
மித்தமேவுங்குகுதனு மானந்தம்
நேருந்தாள்வாயுமே நின்றிடுமாண்டையே-விபரஞ்.
📖 பாடல் எண்: (0139) 📖
நாடியீரைஞ்சு நரம்புகள் கூடியே
நல்கிநடப்பது நட்புகள் கண்டிடில்
நீடியுலாவும் மசையுந்தடுக்கம்
நிரந்தர தாதுசதந்தரநாடியே
நாடியசையுமடக்கு முடக்கு
நடந்துமேயோடி நகர்ந்துபுரண்டு
மோடிகூடியிழுக்கு நரம்புநீண்
டேறிமாறிபடுக்கும் பாராண்டையே- விபரஞ்.
📖 பாடல் எண்: (0140) 📖
வாய்வுதச பத்தின்வாறுமறிந்திடில்
வளமையாம்பிராணன் பானன்வியானனும்
சேயுமுதானன் சமானன் கூர்மகனாகன்
திரிகரனாகிய சித்திரநாடிதான்
ஆயுநாடிநரம்பதுவுந் தனஞ்செய
னருள் தருவேதந்தத்துவனீரைஞ்சு
பாயுந்தசவாய்வு பத்துடனானதும்
பார்க்கப்பார்க்கப் பரீட்சைகளாயிடும்- விபரஞ்.
📖 பாடல் எண்: (0141) 📖
பிராணன்மூலந்தனில்மேல் தொடர்ந்தோங்கியே
பின்னும் பனிரெண்டுவங்குலமோடிடில்
அறிவதுநான்குபண்டடங்கி நாலோடும்
அபானன் மலசலமறிந்து போக்கிடும்
பிரியும்வியானனு முண்டசாரந்தனைப்
பிரித்தெழுந்தெழுபத்தீராயிர நாடிக்கும்
தரியுமுதானன் செரிப்பித்தேப்பமிடச் சமானன்
சரியாகத்தானிருக்கும்வாறு- விபரஞ்
Next Post