மதம் மறப்போம் ! ⭐ மனிதம் வளர்ப்போம் !!
இறைமை உணர்வோம் ! ⭐ இன்பத்தில் திளைப்போம் !!
என்னுடைய நோக்கமெல்லாம்
மனிதர்கள் எல்லோரும் ⭐ மகிழ்ச்சியாக ⭐ இருக்க வேண்டும்.
🌹 நான் என் வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்ப்பதால்,
🌹 அதனால் என்னால் வெளியே செல்ல முடியவில்லை என்றால்,
🌹 என் மீது தான் குற்றம்.
🌹 செல்ல பிராணியை நான் பழக்குகிறேனா? அல்லது அது என்னை பழக்குகிறதா? என்றால்,
🌹 அதுதான் என்னை பழக்குகிறது.
🌹 அது வீட்டில் அசிங்கம் செய்து வைத்து காலையில் வெளியே Walking கொண்டு செல்லுமாறு என்னை பழக்குகிறது.
🌹 அந்தப் பிராணி எங்கேயோ இயல்பாக வாழ்ந்திருக்கும்.
🌹 அதை கொண்டு வந்து நான் என் விருப்பத்திற்கு மாற்ற நினைக்கும் போது தான் எனக்கு பிரச்சனை வருகிறது.
🌹 உலகில் எவ்வளவோ மனிதர்கள் பராமரிப்பு இல்லாமல் ஏழைகளாக இருக்கிறார்கள்.
🌹 என் மனம் அவர்களுக்காக இறங்காமல்,
🌹 ஐந்தறிவு ஜீவன்களுக்காக இறங்கி அவைகளின் இயல்பை இயல்பான வாழ்க்கையை சிதைப்பது குற்றமான செயலாகும்.
🌹 இயற்கையாகவே இயல்பாகவே வாழக்கூடிய பிராணிகளின் மீது இரக்கம் காட்டுவது குற்றம்.
🌹 முதலில் நான் என்னை பராமரிக்க வேண்டும்.
🌹 நான் நன்றாக சாப்பிட்டு தூங்கி வேலை செய்து ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
🌹 என்னுடைய ஆற்றலை நேரத்தை இரக்கம் என்ற பெயரில் பிராணிகளின் மேல் செலுத்தி துன்பப்படுவது அல்லது துன்பப்படுத்துவது குற்றம்.
🌹 ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் செல்ல பிராணியாக ஒரு மலைப்பாம்பை வளர்க்கிறார்கள்.
🌹 அந்த பாம்பு மூன்று நாளாக சாப்பிடாமல் அந்த வீட்டு குழந்தையை மட்டுமே சுற்றி வந்தது.
🌹 அந்தக் குடும்பம் ஒரு மருத்துவரை அணுகி பாம்புக்கு என்ன பிரச்சனை என்று விசாரிக்கும் போது,
🌹 குழந்தையை விழுங்குவதற்காக அந்த பாம்பு தன் வயிற்றை தயார் செய்வதாக மருத்துவர் பதில் அளிக்கிறார்.
🌹 அதனால் செல்லப் பிராணியாக எதை வளர்த்தாலும் அது அதனுடைய இயல்பில் தான் இருக்கும்.
🌹 கருணை என்ற பெயரில் அதை செல்ல பிராணியாக்கி நான் தான் என்னுடைய இயல்பையும் அதனுடைய இயல்பையும் கெடுக்கிறேன்.
🌹 அதனால், ஐந்தறிவு ஜீவன்கள் மேல் இருக்கும் கருணை
🌹 ஆறறிவு மனிதனான என் மேல் இருக்க வேண்டும்.
🌹 உதவ வேண்டும் என்று நினைத்தால் சக மனிதர்களுக்கு உதவுவதே சிறப்பு.