மதம் மறப்போம் ! ⭐ மனிதம் வளர்ப்போம் !!
இறைமை உணர்வோம் ! ⭐ இன்பத்தில் திளைப்போம் !!
என்னுடைய நோக்கமெல்லாம்
மனிதர்கள் எல்லோரும் ⭐ மகிழ்ச்சியாக ⭐ இருக்க வேண்டும்.
காணொளி மட்டுமே போதும் என்ற மனநிலை
உங்களை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்லாது.
🌹 என்னுடைய காணொளி மட்டுமே போதும் என்றால்,
🌹 உங்களால் அடுத்த கட்ட வளர்ச்சி அடைய முடியாது.
🌹 அதாவது உபதேசம் தெரிந்து கொண்டு,
🌹 அனுபவம் பெறுவதற்கான முயற்சியை செய்ய முடியாது.
🌹 நான் என்னுடைய காணொளியை இலவசமாகவும், பொது தளத்திலும் வைத்துள்ளேன்.
🌹 ஆனால், என்னுடைய உபதேசத்தை விலைக்கும், உடற் தகுதியின் அடிப்படையிலும் வியாபார நோக்கத்தில் வைத்துள்ளேன்.
🌹 அதனால் எல்லோரும் உபதேசம் பெற வேண்டும் என்று என்னால் கட்டாயப்படுத்த முடியாது.
🌹 ஏனென்றால் அதை வாங்குவதற்கான வசதியும், தகுதியும் உங்களுக்கு இருக்க வேண்டும்.
🌹 அது இருக்கிறதா ? இல்லையா ?
🌹 உபதேசம் உங்களுக்கு தேவைப்படுமா ? அல்லது தேவைப்படாதா ?
🌹 அல்லது காணொளி மட்டுமே போதுமானதா ??
🌹 என்பதை நீங்கள் தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
🌹 எனக்கு உபதேசம் தேவைப்படுகிறது ஆனால் அதற்கான வசதியும், தகுதியும் என்னிடம் இல்லை என்றால்,
🌹 அதற்கான மாற்று வழியை பயன்படுத்தி காலத்தையும் , உழைப்பையும் கொடுத்து உபதேசத்தை பெற்றுக் கொள்ளலாம்.
🌹 முழுக்க முழுக்க விருப்பம் உங்களுடையது.
🌹 ஆனால் என்னை கேட்டால் காணொளி மட்டுமே போதுமானது கிடையாது என்று தான் சொல்வேன்.
🌹 ஏனென்றால் ஒருவர் கேள்வியிலேயே நின்று விடக்கூடாது.
🌹 அடுத்த கட்ட வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக,
🌹 காணொளியில் உங்களிடம் எழும்பும் எல்லா கேள்விக்குமான பதிலை கொடுத்திருப்பேன்.
🌹 பதிலை தெரிந்து கொண்டு அடுத்த கட்ட வளர்ச்சி அடைவதும்,
🌹 பதிலே போதும் என்று நினைத்து நின்று விடுவதும் உங்களுடைய விருப்பம் தான்.