திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
ரசக்குளிகை
தரு
குளிகைகட்டிக்கொண்டேன்- சூதரச
குளிகைகட்டிக்கொண்டேன்.
📖 பாடல் எண்: (1280) 📖
குளிகையெனுமூலபாதத்திலுநின்று
வெளியொளிதற்பரவெண்மதிசாரத்தில்
நளினமதாகவுநாதத்தைச்சேர்த்துடன்
புளியிலங்கித்துமேபூரணத்தோடவும்- குளிகை.
📖 பாடல் எண்: (1281) 📖
காரசாரத்தைக்கரைத்தொருபாண்டத்தில்
வீரத்தையுங்கிழியாய்க்கட்டிமேலுடன்
காரத்தைச்சாரத்தையேபொடிதூளாய்
நீரதிலிட்டுநிகழ்ந்திருசாமமே- குளிகை.
📖 பாடல் எண்: (1282) 📖
பார்த்துவன்னியனல்பாய்ச்சுங்கமலாக்கினை
ஊரலையற்றுவீரமுற்பனமாகுங்காண்
காரசாரசுன்னசங்கைவேகத்தினால்
வாரதினாலதுவஸ்துவுங்கட்டிடும்- குளிகை.
📖 பாடல் எண்: (1283) 📖
விந்துடனாதமிகவைதசபத்துடனாகிடில்
அந்தமிதுசுன்னமாகிடுமாண்டையே- குளிகை.
📖 பாடல் எண்: (1284) 📖
சவ்வீரசுன்னஞ்சரக்கையிறுக்கிடும்
எவ்விதமாஞ்சரக்காவதுஞ்சுன்னமாய்க்
கவ்வியுமீந்திடுநீரிற்குழைத்துமே
நவ்விக்கடுங்கதிர்நாடியசுண்ணமே- குளிகை.
📖 பாடல் எண்: (1285) 📖
வீரசுண்ணத்தால்வெகுவேதையாகிடும்
மேலுந்துரிசுக்குவிராகனுமிநீரால்
காரசுன்னம்படமேலுங்கவசமாம்
சூரியதனில்சுடசுன்னமதாகிடும்- குளிகை.
📖 பாடல் எண்: (1286) 📖
பாச்சுங்கழஞ்சுப்பாஷாணமசிக்குதுமேல்
தேச்சுக்குருவினில்செங்கதிரில்பட
வாச்சுதமுயிரில்மாட்டிரவியினில்
கூச்சமில்லாமலுங்கூறிதுவாண்டையே- குளிகை.
📖 பாடல் எண்: (1287) 📖
தசபத்துடனிடைத்தாளகம்வாங்கிடும்
விசையதாயிடில்விராகனுமாகிடில்
கசையஓர்கழஞ்சாமதுசுன்னமும்
இசையஅமுரியில்வேதைக்கவிழ்தமே- குளிகை.
📖 பாடல் எண்: (1288) 📖
தாளகந்தன்னைத்தணல்கதிர்வேகமில்
ஆகமப்படியனலும்படப்படத்
தூளதாகிடும்சுன்னமதாகிடும்
ஆளுமேவருகாதுகாணூறலே- குளிகை.
📖 பாடல் எண்: (1289) 📖
லிங்கமொருபலமாகவிளங்கிடில்
அங்கதைவீரஜெயசுன்னமுன்னிடை
வங்கத்தினீரினில்மதிவிட்டழைத்துடன்
பொங்கிப்புத்தாகிடில்போச்சுதுசுன்னமே-குளிகை
📖 பாடல் எண்: (1290) 📖
தாரமாந்தினிச்சுன்னமதாகிடில்
வீரமாவதிதுக்குஇணையதாய்த்
தாரசுன்னமுந்தங்கமுஞ்சேர்ந்திடில்
தாரஞ்செம்புத்தவளமதாகுமே- குளிகை.
📖 பாடல் எண்: (1291) 📖
கேசரின்கிருபாகரமேவிய
வாசமாமதிவாழ்க்கைமுயற்சியான்
பேசும்பேசாதெழுத்தறவோதினும்
மேஷமதுவிளங்குமகத்துகள்- குளிகை.
📖 பாடல் எண்: (1292) 📖
வாசியென்றுசும்மாவாவென்றழைத்தால்
நேசமுன்னாள்நெடுநாளல்லவோ
ஆசைவைத்துஅமுரியோராண்டுநீர்
பாரம்பாசம்பரியாசமில்லையே- குளிகை.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : June 2025
Next Post
👉 9️⃣0️⃣ ஞானவெட்டியான் (1293-1312) 👈