திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
பூரணமுறை
தரு
பூரணஞ்சொல்லுகிறே- னாண்டைகேளீர்
பூரணஞ்சொல்லுகிறேன்.
📖 பாடல் எண்: (1266) 📖
காலைமாலையதிகாலையில்வாசியும்
ஆலமுண்டஅமிர்தத்தினால்மூலமும்
பாலையுண்டுவான்குமறிப்பாலுடன்
சோலைவாழும்சிற்றாமணக்கெண்ணெயே-பூரண .
📖 பாடல் எண்: (1267) 📖
மூலசுத்திமுன்னாளதிகாலையில்
பாலுமென்னப்பகுந்துசரிசமன்
நூலுஞ்சோதியுள்ளுக்குஒருபலங்
காலையில்கரிசாலைமுண்டிடே- பூரண.
📖 பாடல் எண்: (1268) 📖
சிற்றாமணக்குச்செழுமலர்மேவிய
முத்தாடியானமுன்னமேயெண்ணைய்தான்
நித்தமாமூலிச்சாறுஞ்சரிசமன்
வைத்துவாலைக்கதிர்முகமாண்டையே- பூரண.
📖 பாடல் எண்: (1269) 📖
பூமிபாரம்புவியில்நாளுக்குநாள்
சாமிநாவிலுண்ணாக்கு க்கு அண்ணாக்குமேல் அண்ணாக்குமேல்
நாமியொன்றுபெருவிரல்தோய்த்துடன்
நாமிலூட்டினன்நாவினில்தேய்த்திட்டே- பூரண.
📖 பாடல் எண்: (1270) 📖
சாய்க்கச்சாய்க்கச்சரித்திடுங்கோழையும்
வாய்க்கவாய்க்கவழலையுமற்றது
தேய்க்கத்தேய்க்கச்செனித்திடுஞ்சேத்துமந்
தோய்க்கத்தோய்க்கச்சுழிமுனைகாணுமே- பூர.
📖 பாடல் எண்: (1271) 📖
மண்டலமிந்தப்படிமூலமாவது
வாங்குஞ்சிறுகுடல்வாங்குமூலப்புளி
கண்டதோர்பலங்காலையிலுண்டு
கர்மமலமுந்துர்மாங்கிஷமேகுமே- பூரண.
📖 பாடல் எண்: (1272) 📖
பாலுஞ்சாதம்பதமாகும்வகைகரி
வேலுமயில்மீதில்வாலசுப்பிரமணியர்
மேலுங்கண்டகாட்சிவிளக்கமருளியுங்
கோலாகாலகுமரகுருபரன்- பூரண.
📖 பாடல் எண்: (1273) 📖
என்குருசுவாமியெனக்குபதேசிகன்
பொன்போலும்பூரணன்போதித்தனுக்கிரகம்
அன்புவைத்துச்சுழியப்பாச்சாதனை
முன்பனுக்கிரகம்பூரணமாச்சுதே- பூரண.
📖 பாடல் எண்: (1274) 📖
வழலைக்கபமும்பலமும்மலமும்
விழலாகப்போச்சுதுவேதனையாச்சுது
சுழலும்ரவிமதிசுத்தமொன்றாச்சுது
சோதியொளிநாதச்சுரோணிதம்வாய்ச்சுது- பூரண.
📖 பாடல் எண்: (1275) 📖
மும்மலமற்றதுமூன்றுமண்டலத்தில்
தம்மையறியச்சகத்திரமாச்சுது
நன்மைதீமையுமிம்மையும்போச்சுது
நாதவிந்தாலும்நவசித்திரவீடாச்சுது- பூரண.
📖 பாடல் எண்: (1276) 📖
விந்துநீருவெளியிலுலாவிய
அந்தவாய்வு அதுசப்தத்துடன்
எந்தனாசானெனக்குபதேசமு
மைந்தனென்றுமகிழ்ந்துரைத்தார்களே- பூரண.
விருத்தம்
📖 பாடல் எண்: (1277) 📖
புளியதனை யுண்டதனா லாவ தேது
பூரணத்தி லேறியல்லோ தேற வேணும்
வெளியான விந்துவைத்தா னறிய வேணும்
வேதாந்த சாரமதைக் கட்ட வேணும்
களியான காரணத்தை யறிய வேணும்
காரணமுன் சாரமதைக் கட்ட வேணும்
எளிதல்ல விந்தமுரி யிதனா லாச்சு
இன்னமொன்று சொல்லுகிறே னினிதா னாண்டே.
வெண்பா
📖 பாடல் எண்: (1278) 📖
கேளும் புளியுப்பால் கேசரம்போய்ப் பாய்ந்துவிடும்
நாலுநா ளாண்டுதிங்கள் நானறிந்தேன்- பீளவுடல்
கண்டேன் கனகசபை காயசித்தியா லறிந்து
உண்டேன் பரந்தனிலும் ஓம்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : June 2025
Next Post
👉 8️⃣9️⃣ ஞானவெட்டியான் (1279-1292) 👈