திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
விருத்தம்
📖 பாடல் எண்: (1235) 📖
திங்கள்தச பத்தாச்சுப் பால னார்க்குச்
சிறுவனுமே பிறந்திட்டான் திங்கள் பத்தில்
கங்கையணி சடையாரைப் போற்றி நித்தங்
கருத்தாலு மெடுத்துலகில் செனித்தேன் காணா
மங்கையுடன் வாதாடி யமிர்தங் கொண்டு
மனோன்மணிதன் பாதமற வாமல் போற்றி
அங்கிருந்த வண்மையெல்லா முரைப்பேன் காணும்
ஆதிகுரு பாதமற வாமல் தானே.
📖 பாடல் எண்: (1236) 📖
மூலமெனும் வச்சிரப்பை வீட்டுக் குள்ளே
மூங்கில்முளை போலதுவுங் காரசாரம்
வாலையரு ளாலமைந்த வாறு தன்னால்
மதிரவியுங் கூடியது மிரண்டு ஆண்டில்
பாலனது போல்ஜெனித்துப் பிறவி யாகிப்
பத்துதிங்கட் குள்ளுஞ்சிறு பால னாகித்
தூலமிந்த மூலமதி லுதித்த வன்மை
சொல்வனினிக் காயம்வந்த சூக்ஷ மாண்டே.
காயசித்தி
தரு
காயம்வலுத்ததுகா- ணாண்டே- காயம்வலுத்ததுகாண்.
📖 பாடல் எண்: (1237) 📖
காயம்வலுத்ததுமாய்கைமறைந்தது
கவலைதெளிந்ததுசகலமொழிந்தது
நேயனருள்பணிந்தாக்கைவலுத்தது
நீயென்றுநானென்றுநேசமொழிந்தது- காயம்.
📖 பாடல் எண்: (1238) 📖
கூற்றுவனென்கிறகொடூரமழிந்தது
கோடானகோடிவியாதிபிறந்தது
யேற்றியிருந்தஇகழ்ச்சிமறந்தது
என்னுள்ளேயீஸ்பரன்தன்னையறிந்தது- காயம்.
📖 பாடல் எண்: (1239) 📖
வாசமாய்நித்திரைபாசமறந்தது
வையகத்தோர்கள்வசியம்பிறந்தது
தூஷணையற்றதுபூசைநைவேத்தியஞ்
சொல்லுமந்திரசெபஞ்சொக்கியும்பேரச்சுது-காயம்.
📖 பாடல் எண்: (1240) 📖
தத்துவந்தொண்ணூற்றாறும்பிரிந்தது
தாதுகள்நாடிசடமும்வேறாச்சுது
சுத்தசலமென்றமுரிதேனாச்சுது
சுகஞானதீபச்சுழியைக்காணலாச்சுது- காயம்.
📖 பாடல் எண்: (1241) 📖
காமப்பாலுண்ட கருத்துமழிந்தது
காமக்குரோதலோபங்கண்டிதமாச்சுது
வாமப்பால்கொண்டுமதியொளிகண்டு
மகிழ்ச்சியடைந்துவச்சிரதேகமாச்சுது- காயம்.
📖 பாடல் எண்: (1242) 📖
முலத்தினுள்ளமுப்பாழுமழிந்தது
முன்னமேயன்னமயமும்பிரிந்தது
ஞானத்திலேறவும்வாசிவளரவும்
ஞானசிரோமயகியானவானாண்டையே- காயம்.
📖 பாடல் எண்: (1243) 📖
ஓராண்டுக்குள்ளேயுடல்வெவ்வேறாச்சுது
ஓங்காரத்துள்ளேயுயிருறவாச்சுது
நீங்காதவாசிநிராமயமாச்சுது
நின்னுள்ளேநின்மயம் நேசமதாச்சுது- காயம்.
📖 பாடல் எண்: (1244) 📖
பிராணாயவாசியும்பின்னிட்டிழுக்காமல்
பேசுமூலாதாரம்வாசம்பொருந்திட
வீறானவாயுவுந்தசபத்துங்கூடியு
மேவியொருமித்துத்தாவியுமொன்றதாய்- காயம்.
📖 பாடல் எண்: (1245) 📖
பத்துமொருமித்துப்பாய்ந்திடுநாடிதான்
நித்தம்வாசியதுநேர்பிசகாமலும்
சத்துஞ்சித்தானந்தமுத்தியருள்தருஞ்
சித்தியனுக்கிரகசுத்தமதிலமர்- காயம்.
📖 பாடல் எண்: (1246) 📖
நித்தம்வாசியூதிநின்றுருசாதியும்
மற்றதுகைப்புஅப்புவஞ்சுன்னமாம்
பெற்றபேரிப்படிப்பேர்பெறுஞானிகள்
உத்தமர்சொல்லுமுண்மையிதாண்டையே – காயம்.
📖 பாடல் எண்: (1247) 📖
வாசிநிலையானதேன்மாண்டிடுந்தேகமும்
பாசம்வைத்துவிசுவாசித்துஊதிடும்
பேசப்பேசவெகுகோடிரகசியம்
ஈசனருள்படியனுக்கிரகநிலையினில்- காயம்.
📖 பாடல் எண்: (1248) 📖
இந்தவாசியூதிஎத்தேசகாலமும்
அந்தப்படியனுக்கிரகநிலையினில்
சிந்தைவைக்காமலுஞ்செய்கைவிதப்படி
விந்தையதாகவிளங்கினாராண்டையே – காயம்.
📖 பாடல் எண்: (1249) 📖
சந்தையங்கள்வாராசாட்சிநூலைப்பாரும்
வந்தவழிவருமாறலகப்படும்
எந்தன்கருத்தறிந்தந்தவிதிப்பயன்
நிந்தனையுமில்லாநீடூழிவாழ்வார்களே- காயம்.
📖 பாடல் எண்: (1250) 📖
கட்டும்வாசியறுகால்பன்னிரண்டினால்
நெட்டிட்டேறாமலும்நீஞ்சிடநீஞ்சிட
மட்டுப்படுமிந்த அம்பிகாயோகமுந்
தட்டுப்படுங்கனம்பலசோதியில்- காயம்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : June 2025
Next Post
👉 8️⃣7️⃣ ஞானவெட்டியான் (1251-1265) 👈