திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
விருத்தம்
📖 பாடல் எண்: (1224) 📖
காஞ்சபுளி தனையெடுத்துத் தூளாய்ச் செய்து
கம்பியுப்புக் கிடைக்கிடைதான் கலந்து வுண்ணத்
துஞ்சலென்ற குன்மமெல்லாம் பறந்து ஓடுஞ்
சுணங்கனுக்கு ஈயாதே தோஷ மெய்தும்
ஒஞ்சலென்ற புளியமுரி சாரணையுங் கூட்டி
யுண்டிடவே நோய்பறக்கு முடனே தானும்
அஞ்சாத நோய்களெல்லா மமுரி தன்னால்
அலரியது முடலைவிட் டகலு மாண்டே.
📖 பாடல் எண்: (1225) 📖
அகலவும்பத் தியங்காணு மருளக்கேளு
அவிழ்தமதில் கோளாறு அனேக மார்க்கம்
புகலவுநா தாக்களுரைத் தமிர்த வாக்கியம்
பூட்டினார் வெகுநூல்கள் புனித மாக
விகற்பமில் லாமலுரை மறப்பாய்ப் போச்சு
வெளியாகப் பாடியுமே விகற்ப மாச்சு
உறையதுவா யுரைத்திடுநூல் செய்தி யெல்லாம்
உரைதவறா துரைத்துவிட்டா ரொளியாய்த் தானே.
📖 பாடல் எண்: (1226) 📖
காலசருங் கையெரியுங் கண்வாய் கூசும்
கண்டமது பச்சைபுண் ணதிதங் காணும்
ஆலவிடந் தீண்டினது போலாந் தேகம்
அசதிமெத்த தீபனமு மதிகங் காணும்
வாலையொரு திங்களுமூன் றாச்சு தானால்
மயக்கமெனும் பேதியதா மனந்தா ளாது
கோலமெனு மனதுமே றேற வேணுங்
கொடிதாகக் கொண்டறிந்து கொள்ள லாமே.
📖 பாடல் எண்: (1227) 📖
உள்ளிருந்த நோய்களெல்லாம் வெளியே காணும்
உடம்பெல்லாம் புண்ணாக வெந்து நீறு
மெள்ளிலைபோல் மேனியெல்லாந் தடித்துக்காணும்
இந்திரியமு டைந்தல்லோ தண்ணீ ராகும்
கொள்ளியால் சுட்டபுண்போல் நாபி வேகுங்
குமட்டுவதா லவிழ்தத்தைக் கொள்ளாட்டாது
துள்ளிவிழுந் தாலறுமதா மெரியுந் தேகம்
சுருக்கெனவும் நீர்க்கடுப்புந் தோன்றுந் தானே.
📖 பாடல் எண்: (1228) 📖
ஒட்டொட்டாய் மேனியெல்லாங் கடுப்புத் தோன்றும்
ஊதுமது நீர்த்தாரை யுடனே புண்ணாங்
கட்டிவைத்த பழங்கனி போல் தேகங் காந்தும்
கலகலென்று நரம்பெல்லாம் தளர்ந்து காணும்
முட்டியல்லோ வாய்வு அங்கே யேறி மீளும்
முறைமையைந்துதிங்களுக்கு ளொருமை யாகும்
ஒட்டியம் போல் வடமயிலாள் தன்னை நம்பி
ஓங்கார பீடமதி லூன் றிடாயே
கற்பமுண்ணும்போது நேரிடுந் துன்பம் தரு
தனனாந்தனதனனா-தான-தந்தனாந்தான தனதனா.
📖 பாடல் எண்: (1229) 📖
அண்ணமாரேகேளீரோ-அந்த-அஞ்சுதிங்கள்படும் பாடதனில்-
என்னவென்றுயானுரைப்பேன்-நல்ல-இடிபோலிடிகள்முழங்கிடவே
மன்னர்மன்னர்கூடியல்லோ-நல்ல மல்லுயுத்தங்கள் வளர்ந்ததுபோல்
தன்னுடலுந் தன்னுதல்ல-விந்து-தாமரைதண்ணீர்போல்தான் வருதல்
சொன்னேன்படும்பாடு-இந்நூல்- சூதென்றுந் தள்ளிடலாகாது
உண்டால்தெரியுமதாம்-அமுரி உடலுக்குள்தொண்ணூற்றறுவருமே
சென்றாலுயித்தியங்காண்- மீளாச்-சித்திர வதையிதைநீயறிந்து
பண்டுபழகினதால்- பின்பு-பாவையருடன் சேராதே-தனனாந்.
📖 பாடல் எண்: (1230) 📖
கண்டாலும்பேசாதே- மெத்த- கடினமதாம் பேதிதாளாது
நரம்புஎலும்புகளும்- மச்சை-நாடிகளுள்ளபசைகளும்போம்
கரும்புமுறிந்ததுபோல்- அஸ்தி-கட்டுதளர்ந்துவிட்டுவிடுங்காண்
துரும்பாகிடுஞ்சடலம்- செல்லுத்தூணை-யரித்ததுபோல்காணும்
வருமேயனேகம்வினை- மட- மாதுமயல்கொண்டணுகாதே
அந்தியினிற்கொள்வதற்கு- புளி-சந்திற்கிடக்குதுதான்றிந்துந்
தன்னைப்போலிருக்குமதாங்- கற்பந்தானே-யறிந்திடும் பேர்களுக்கு
முன்னமேயான் சொல்லிவிட்டேன்அந்தமுக்கோணமாகியகேசரிபை- தனனாந்.
📖 பாடல் எண்: (1231) 📖
அன்னம்போலிளமயிலாள்- அந்த-அம்பிகைபாதத்தை நம்பினேன்யான்
என்னைப்போலெளியவர்கள்- இனி-எங்கெங்குமுண்டு பார்வையகத்தில்
சாதியில் விந்தீஸ்பரன்காண்- எந்தன்-தாயோபராபரை தானளித்த
வேதியர்குலங்காணும்- பிர்ம-வேதவேதாந்தவிதித்தகுலம்
நாதன்பரமகுருவாம்- பிர்ம-நாதாந்தத்திலவதரித்தோர்
பேதாபேதங்களெந்தன்- சாதி-பிரபல்லியமெவராரறிவார்
ஆறாந்தான்திங்களிலுந்- தேகம்-அசதிகள்மெத்தவுறக்கமதால்
மாறாதது- மக்க-மங்கமாதிதமுதமுமனல்தேகமதே- தனனாந்.
📖 பாடல் எண்: (1232) 📖
தோராதுடல் கூசந்- தொண்ணூற்-றாறுகருவியுறுஞ் சோபமதாம்
வேறாய்வெவ்வேறுபடுத்தி- மாது-வேதனைபோலுடல்வேசாறும்
வீறுடன்பசிகோபங்கனல்- வேக-மெத்தகாணும்பூரணத்தில்
கூறுடனறிந்துகற்ப- மதி- கொண்டாலல்லோதேகக்கூறுகாணும்
தேறுமேழுதிங்கள்- மாது-செல்வமயக்கங்கள்பொல்லாது
பேறுபெற்றறிந்தோர்கள்- பிர்ம- கற்பமதின்கூறுபிரபல்யமே
யெட்டாந்தான்திங்களிலும்- மெத்த-கொட்டாவிவிட்டாலுயிர்போகும்
பட்டால்தெரியவரும்- பாடு-பட்டதனாலபாலையாவதுகாண்- தனனாந்.
📖 பாடல் எண்: (1233) 📖
விட்டால்விந்துவெந்திடுங்காண்- மீளாது-காமக்குரோதத்தினால்
கெட்டாருலகருமே- மாது- கேணியோனிதனில்கேவலமாய்
ஒன்பதுகாண்திங்களிலே- பின்-னுபாயமதாகவுந்தேறவேணும்
ஜென்மவினைப்பயன்போகுஞ்- சிவ-யோகராஜாங்கச்செயல்காணும்
பொன்போலுடல்விளங்கும்- மாயப்-போதனைகண்டவர்போய்மீளார்
ஐம்பூதமாரறிவார்- மதி-அப்புஅறிந்தோரவர்மாளார்
பத்தாந்தான்திங்களிலும்- துயர்-பாலன்படும்பாடுமெத்தவுண்டு
கற்றாற்கவியார்காணியங்- கற்பங்-காயசித்திபெற்றால்காலனில்லை- தனனாந்.
📖 பாடல் எண்: (1234) 📖
வித்தால்விளைவுமுண்டு- மிகு-வேதனைமெத்தவெகுபாடு
சற்றாகிலும்பொறுக்காச்- சடஞ்- சாக்காடுசாகாதிருப்பதுபார்
உற்றாருறவின்முறை- சுற்றத்-தார்களொருதுணையானறியேன்
இதுக்குமருந்ததுவும்- புவியில்-எங்குமில்லைகருகண்டறியார்
உதவாதினிவறியேன்கற்ப-முண்டி-டுவோர்மாற்றதுகாணும்
இறவார்கதிர்மதியால்- செட- மெண்சாணுடலும்வலுத்திடுங்காண்
பரவசமாயளித்தேன் – ஜென்ம-பாதகஞ்செய்தால்பறந்து விடுந்
துரைராஜயோகத்தினால்- துன்பஞ்-சேராதுகற்பச்சுகாதீதமே- தனனாந்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : June 2025
Next Post
👉 8️⃣6️⃣ ஞானவெட்டியான் (1235-1250) 👈