பெரியோர்கள் சாபமிட்டால் அந்த பாவம் என்னை பாதிக்குமா?
🌹 என்னுடைய பெரியவர்கள் எல்லாம் சொல்லி இருக்கிறார்கள் நீ இந்த ஜாதியை சேர்ந்தவன்.
🌹 ஒரு குறிப்பிட்ட சமூகத்தை ( ஜாதியை) சேர்ந்தவர்களின் முன்னால் காலணி அணியக்கூடாது என்று எனக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள்.
🌹 எனக்கு வெயிலில் கால் சுடுகிறது. முள் குத்துகிறது. இப்போது நான் என்ன செய்வது?
🌹 என்னுடைய அப்பாவுக்கோ அம்மாவுக்கோ அல்லது பெரியோருக்கோ என்னுடைய வலி தெரியாது. வாழ்க்கை என்னுடையது.
🌹 அவர்கள் ஏதோ ஒன்றை கற்றுக் கொண்டார்கள் என்றால் அது அவர்களுடைய சரி
🌹 என்னுடைய கால் சுடுகிறது, என்னுடைய கால் வலிக்கிறது, அப்படி இருக்கும்போது பெரியோர்கள் சொல்வதை மீறி நான் காலணி அணிந்தால் அதற்காக அவர்கள் சாபம் விட்டாலும் என்னை பாவம் வந்து சேராது.
🌹 அவர்கள் சொல்வதைக் கேட்டால் தான் எனது காலில் பாவம் வந்து சேரும்.
🎶கண்ணிலே என்ன உண்டு கண்களா அறியும். என் மனம் என்னவென்று என்னை அன்றி யாருக்குத் தெரியும்.🎶
🌹 என்னை தான் எனக்கு தெரியும். என்னை நன்றாக வைத்திருக்கத்தான் நான் வந்திருக்கிறேன்.
🌹 இந்த உலகம் முழுவதும் முட்டாளாக இருக்கலாம் ஆனால் நான் முட்டாளாக இருந்தால் அது என்னுடைய பிரச்சனை.
🎶உனக்காக நான் அழுதால் இயற்கையில் நடக்கும்(சாத்தியப்படும்). உனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்(சாத்தியப்படும்).🎶
🌹 நான் மனிதனா?? இல்லை இந்த ஜாதியை சேர்ந்தவனா ??
🌹 மனிதன் தானே, அப்படி என்றால் ஜாதி எங்கிருந்து வந்தது .
🌹 நீங்கள் எங்கு வேண்டுமானாலும் பிறந்திருக்கலாம் ஆனால் எப்படி வாழ வேண்டும் என்று நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
🌹 வாழவில்லை என்றால் அது உங்களுடைய தவறு.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : March 2025