கேள்வி எழவில்லை என்றால் அது அறியாமையா? அல்லது அறிவுத் தெளிவா?
🌹 கேள்வி எழும்பாததற்கு காரணம் அறியாமையோ அல்லது அறிவினாலோ கிடையாது.
🌹 தேவையின் பொருட்டு தான் கேள்வி எழும்பும்.
🌹 தேவையில்லாத போது கேள்வி எழும்பாது.
🌹 கணவனோ அல்லது மனைவியோ ஒருவரை ஒருவர் சந்தேகப்படும்போதுதான் கேள்வி எழுப்புகிறது.
🌹 நீ நீயாக இரு, நான் நானாக இருக்கிறேன் என்று புரிந்து விட்டால், ஒருவரை ஒருவர் ஆராய்ச்சி செய்வதற்கான தேவை அங்கே இருக்காது.
🌹 அதனால், கணவன் மனைவிக்குள் கேள்வி எழும்பாது.
🌹 அதாவது, அவர்கள் இருவரும் கணவன் மனைவிக்கான இலக்கணத்தை சரியாக புரிந்து கொண்டதால் அவர்களுக்கு கேள்வி விரும்பாது, அதனால் அவர்கள் தெளிவாகிவிட்டார்கள்.
🌹 இப்போது ஒரு தகவலை தெரிந்து கொள்ளும் போது,அதன் பொருட்டு தேவை ஏற்பட்டு அதனால் கேள்வி எழும்பும்.
🌹 பூமி சுற்றுகிறது என்ற தகவலை தெரிந்து கொண்டால்,
🌹 அது வலது பக்கத்திலிருந்து, இடதுபக்கம் சுழல்கிறதா ?அல்லது இடது பக்கத்திலிருந்து, வலது பக்கம் சுழல்கிறதா ? என்ற கேள்வி எழும்பும்.
🌹 அதனால, எந்த தளத்திலிருந்து பார்த்தாலும் ஒரு கேள்வி தேவையின் பொருட்டு தான் எழும்பும்.
🌹 அறிவே இல்லாத மனிதனுக்கு தேவைகள் ஏற்படுவதில்லை. அதனால் கேள்வி எழும்புவதில்லை.
🌹 சிறிது அறிவு மலரும் போது தேவைகள் ஏற்படும் கேள்வி எழும்பும்.
🌹 ஆனால் கேள்வி எழும்புவதே தெளிவு பெற வேண்டும் என்பதற்காகத்தான்.
🌹 கறி சாப்பிடலாம் என்று ஒரு கூட்டமும்,
🌹 கறி சாப்பிடக்கூடாது என்று ஒரு கூட்டம் இருப்பதால் தான்
🌹 நான் கறி சாப்பிடலாமா ? சாப்பிடக்கூடாதா? என்று ஒரு கேள்வி எழும்புகிறது.
🌹 அதாவது இரண்டாக இருப்பதால் தான் கேள்வி எழுப்புகிறது.
🌹 நான் என்ற ஒன்றின் மீது (நான் என் மீது) கவனம் கொள்ளும் போது,
🌹 அதாவது, நான் எனது பசியின் (தேவையின்) மீது அக்கறை படும்போது,எந்த கூட்டத்திலும் சேர வேண்டாம். எனக்கு கிடைத்ததை சாப்பிடலாம் என்று முடிவுக்கு (தெளிவுக்கு) வந்து விடுவேன்.
🌹 அதனால் எந்த கேள்வி எழும்பினாலும் எனது தேவையின் பொருட்டு தான் எழும்பியதா என்பதில் நான் கவனமாக இருக்க வேண்டும்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : March 2025