அணுவை கண்டுபிடித்த ஔவையார் பற்றி புத்தகம் எழுதுவீர்களா?
🌹 ஔவையார் அணுவை கண்டுபிடித்தாரா, இல்லையா, என்று எனக்கு தெரியாது.
🌹 ஆனால் ஔவையார்
“அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்”
என்று, அணு என்ற வார்த்தையை, சொல்லி வைத்திருக்கிறார் .
🌹 ரூதர் போர்டு உடைத்த, Autom என்று நாம் சொல்கிற, அந்த அணுவைத் தான் ஔவையார் சொல்கிறாரா ? என்று எனக்கு தெரியாது.
🌹 நான் ஔவையார் எழுதிய மூதுரை என்னும் பாடலுக்கு விளக்கம் எழுதி வைத்துள்ளேன்.
🌹 மேலும் ஔவையார் பாடலுக்கு விளக்கம் தர சொன்னாலும் தருவேன்.
🌹 ஆனால் அணுவை கண்டுபிடித்த ஔவையார் என்று சொல்லி விளக்கம் தர சொன்னால் எனக்கு தெரியாது.
🌹 அவர் இரும்பின் அணு எப்படி இருக்கும், தங்கத்தின் அணு எப்படி இருக்கும் என்றெல்லாம் சொல்லவில்லை.
🌹 ஒருவேளை ஔவையார் அணுவைப் பற்றி விளக்கமாக பேசிய புத்தகத்தை என்னிடம் கொடுத்தால் நான் அதை படித்து தெரிந்து கொள்வேன்.
🌹 எந்த ஒரு நல்ல புத்தகத்திற்கும் வாய்ப்பு கிடைத்தால் நான் விளக்கம் எழுதுவேன்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : March 2025