ஞானப்பழத்தை பெற விநாயகர் தாய் தந்தையை சுற்றியதும் முருகன் மையில் மேல் ஏறி உலகை சுற்றியதும் ஏன்?
🌹 விநாயகரையும், முருகரையும் உலகை சுற்றி வந்து ஞானப் பழத்தை பெற்றுக் கொள்ளுமாறு ஏற்படுத்தப்பட்ட போட்டியில்,
🌹 தாய் தந்தையே தனது உலகம் என்று எண்ணி விநாயகர் அவர்களை சுற்றி ஞானப் பழத்தை பெற்றதாகவும்
🌹 முருகர் வேலை எடுத்துக் கொண்டு மயில் மீது ஏறி பரந்த உலகை சுற்றியதால் ஞானப் பழத்தைப் பெறவில்லை என்றும் ஒரு கதை சொல்லப்பட்டுள்ளது.
🌹 இதை நேரடியாக புரிந்து கொண்டால் நடைமுறையில் சாத்தியப்படுமா? என்றால் சாத்தியப்படாது.
🌹 ஏனென்றால் உண்மையிலேயே ஒருவன் மயில் மீது ஏறி உலகை சுற்றி வர முடியுமா ? என்றால் முடியாது.
🌹 ஒரு மயிலால் உலகத்தையே சுற்றி வரும் வரக்கூடிய அளவுக்கு பறக்க முடியுமா ? என்றால் முடியாது .
🌹 அப்படி என்றால் இந்த கதை சொல்லிய மனிதர்கள் முட்டாளா?
🌹 இல்லை நான் சரியாக புரிந்து கொள்ளவில்லையா ? என்றால்,
🌹 ஆம், நான் தான் சரியாக புரிந்து கொள்ளவில்லை.
🌹 இந்த கதை, ஒரு தெளிந்த குருவின் மூலம், குருவின் உபதேசத்தால் ஞான விசாரம் செய்து பார்க்கக் கூடிய ஒரு கதை.
🌹 அதை நேரடியாக புரிந்து கொண்டால் நடைமுறையில் ஒத்துப் போகாது.
🌹 ஆனால் குரு உபதேசம் பெற்ற பின் புரிந்து கொண்டால் நடைமுறையில் ஒத்து போகாமல் இருக்காது.
🌹 ஒரு மயில் எப்படி இருக்கிறது என்றால், வேல் போன்று இருக்கிறது.
🌹 வேல் போன்று இருக்கும் மயிலை கொண்டு பரந்து விரிந்து இருக்கும் இந்த உலகை சுற்றி வருவதால் ஞானம் அடைய முடியாது என்றும்,
🌹 தனது தாயான (உடலையும்), தந்தையான (உயிரையும்) , வினைகளுக்கெல்லாம் நாயகமாக இருக்கும் மனதால் சுற்றி வந்தால் ஞானப் பழத்தை பெற முடியும் என்பதை தெளிவாக கதையின் மூலம்,
🌹 குருவை சந்தித்தவர்களுக்கும், சந்திக்காதவர்களுக்கும் வேறு வேறு கோணத்தில் புரியும்படி விளக்கியுள்ளார்கள்.