கடவுள் சூன்யமாக இருக்கிறது என்றால் கடவுளை சிவன் என்று அழைக்க காரணம் என்ன?
🌹 சிவன் என்பது கடவுளுக்கான இன்னொரு பெயர்.
🌹 சூன்யமாக, வெட்ட வெளியாக இருக்கும் கடவுள் தான் எனக்குள் உயிராக ஜீவனாக (சிவனாக) இருக்கிறது.
🌹 அதனால் தான் கடவுளுக்கு ஜீவன் (சிவன்) என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
🌹 கடவுளுக்கு பலர் பல பேர் வைத்து அழைத்திருக்கிறார்கள்.
🌹 கடவுள் என்ற பெயரின் அர்த்தம் என்னவென்றால், கடத்திற்க்கு உள் என்ற பொருள் தரும்.
🌹 இந்த கடவுளை அல்லது வெட்டவெளியை வெட்ட முடியாது அதாவது பகுக்க முடியாது. அதனால் பகுக்க முடியாத வான் (பகவான்) என்று வள்ளுவர் பெயர் வைத்திருக்கிறார்.
🌹 கடவுள் (வெட்ட வெளி) எங்குமாக வியாபித்து இருப்பதால் அதற்கு சர்வ வியாபி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
🌹 கடவுள் (வெட்டவெளி) எல்லாவற்றையும் (சர்வத்தையும்) ஆள்வதால் அதற்கு சர்வேஸ்வரன் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
🌹 கடவுள் (வெட்டவெளி) மீது எந்த மலமும் ஒட்டாது.அதனால் அதற்கு நிர்மலன் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
🌹 கடவுளுக்கு (வெட்ட வெளிக்கு) ஒரு குணம் இல்லாததால் அதற்கு நிற்குணன் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
🌹 கடவுளுக்கு (வெட்டவெளிக்கு) நிகராக எதையும் வைக்க முடியாது அதனால் அதற்கு நிகரற்றது என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
🌹 கடவுள் (வெட்டவெளி) சூன்யமாக இருப்பதால், அதற்கு புத்தர் சூன்யம் என்று பெயர் வைத்திருக்கிறார்.
🌹 தற்போது சிவன் என்றாலும், கடவுள் என்றாலும், பகவான் என்றாலும், சர்வ வியாபி என்றாலும், சர்வேஸ்வரன் என்றாலும், நிர்மல் என்றாலும் நற்குணன் என்றாலும், நிகரற்றவன் என்றாலும், சூன்யம் என்றாலும் வெட்ட வெளியில் தான் குறிக்கிறது.
🌹 கடவுளுக்கு இந்த பெயர்களை மட்டும்தான் வைத்து அழைக்க வேண்டும் என்று கிடையாது.
🌹 உங்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி,
🌹 உங்கள் உணர்வின் வெளிப்பாடாய் எந்த பெயரும் வைத்து அவனுடன் உறவாடலாம்.