அறம் செய விரும்பு – விளக்கம் (Aram seiya virumbu – vilakkam)
🌹 அறம் என்றால் என்ன என்பதை பற்றி தெரியாத நிறைய மனிதர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள்.
🌹 அவர்கள் அறத்தை தெரிந்து கொண்டு செயல்பட விரும்ப வேண்டும் என்பதற்காக அறம் செய்ய விரும்பு என்று ஔவையார் பாடி வைத்திருக்கிறார்.
🌹 அறம் என்பது என்னவென்றால்,
🌹 நான் என்னை சிறப்பாகவும்,
🌹 நான் என்னை மகிழ்ச்சியாகவும்,
🌹 நான் என்னை கொண்டாட்டமாகவும்,
🌹 வைத்துக் கொள்வது தான் அறம்.
🌹 இப்போது ,
🌹 பல்லக்கில் செல்லும் ஒரு மனிதன் அறமுடையவனா?
🌹 இல்லையென்றால்,
🌹 பல்லக்கை தூக்கி செல்லும் மனிதன் அறமுடையவனா? என்றால்,
🌹 இருவருமே அறமுடையவர்கள் தான்.
🌹 எப்படி ? என்றால் ,
🌹 நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக,
🌹 ஒருவர், நான்கு மனிதர்களுக்கு தேவையான பொருட்களை கொடுத்து உதவி அவர்களின் உதவியால் பல்லக்கில் பயணிக்கிறார்.
🌹 கிடைக்கும் பொருட்களால், பல்லக்கை தூக்கி செல்பவரும், கொண்டாட்டமாகவும் மகிழ்ச்சியாகவும் அந்த செயல்களை செய்கிறார் என்றால்,
🌹 இருவருமே அறமுடையவர்கள் தான்.
🌹 தன்னுடைய தேவை அறிந்து அறத்துடன் வாழும் ஒரு மனிதன் தான்.
🌹 பிறரின் தேவையையும் பூர்த்தி செய்து அவரும் அறத்துடன் வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறான்.
🌹 பல்லக்கை தூக்கிச் செல்பவன் தேவை, பல்லக்கில் செல்ல வேண்டும் என்றிருந்தால் , அதற்காக முயற்சித்து அறத்துடன் செயல்பட்டு வெற்றியடையலாம்.
🌹 ஆனால், மனிதர்கள் அறம் செய்ய விரும்பாததால்,
🌹 அதாவது,கொண்டாட்டத்துடன் தனது செயல்களை செய்ய விரும்பாததால்,
🌹 அவர்களுக்கு, அறம் செய்ய விரும்பு (கொண்டாட்டத்துடன் செயல்களை செய்ய விரும்பு) என்று ஔவையார் பாடி வைத்திருக்கிறார்.