திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
வேறு- விருத்தம்
📖 பாடல் எண்: (1202) 📖
மூல குண்டலி மும்மத வாரிசூழ்
ஆல முண்டயான் மால்திரு பொற்பதம்
வாலி குண்டலி மாமுக னைத்தொழச்
சீல மாமலர்ச் சேவடி போற்றுவோம்.
வேறு
📖 பாடல் எண்: (1203) 📖
அண்ட ரண்டபகி ரண்ட மண்டல
அகண்ட குண்டலியின் பொற்பதம்
நின்றி லங்குமதி வாரி சூழ்மருவி
நிகழு லாலியவன் நிர்மலம்
கண்ட தாரையுட லாதி யந்தசுழி
கருணை ஞானதமிழ் கருதயான்
தென்ற லாவிகதிர் திருப்ப ரங்கிரியி
திசைமு கன்கமலம் போற்றுவாம்.
வேறு
📖 பாடல் எண்: (1204) 📖
வெற்றிதரு ஞானவெட்டி ஆயிரத்
தைம்பதுக்கு மேலா மஞ்சில்
சித்திதருங் காயகற்ப நாலாண்டு
சென்றதின்பின் செனித்த நோய்க்கு
முத்திதரு மவிழ்தமொடு வாதவயித்
தியமுமுப்பு முடிந்த வாறும்
சத்தியமா மமிர்தமுண்டு சண்டனையுஞ்
செயித்துநிலை சாதித் தேனே.
📖 பாடல் எண்: (1205) 📖
இத்தலத்தில் முன்னோர்கள் மறைத்தமறைப்
பொருள்களெல்லா மியம்ப லானேன்
கற்றறியார் கற்றுணரக் கற்பசித்தி
யோகசித்தி காய சித்தி
சித்ததித சத்துஞ்சித்து மித்துருசத்
துருக்களின் செய்தி யெல்லாம்
முத்தமிழால் குருமுனியி னனுக்கிரக
மிருந்ததனால் முடிந்த தாண்டே.
📖 பாடல் எண்: (1206) 📖
முடிவதுமெய்ஞ் ஞானகுரு பரனருளா
லாறாண்டு முடிய வேணும்
வடிவுடைய வம்பிகைவா லாம்பிகைப்பெண்
னருள்இந்நூல் மவுனந் தன்னில்
கெடிவீர சிங்கமெனு ஞானவெட்டி
யாலமைந்த கீர்த்தி தன்னாம்
படிப்படியா யெய்துவதி ரவியதனால்
பதம்பெற்றுப் பாரில் வாழ்வார்.
📖 பாடல் எண்: (1207) 📖
இற்பிறப்பு மகற்றகற்பம் வாசியது
நிலைத்துவிட இயம்ப லானேன்
சற்பமதின் சாரையினால் சருகினதா
லிடையூறு சார்ந்த தாலும்
கற்பத்தை யுண்டுவருங் காலமதி
லவபத்தியங் கருதுங் காலை
உற்பனநோய் வைத்திடிலு மதற்குவயித்
திய அவிழ்த முரைப்பே னாண்டே.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : June 2025
Next Post
👉 8️⃣4️⃣ ஞானவெட்டியான் (1208-1223) 👈