திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
வேறு
📖 பாடல் எண்: (1186) 📖
கன்றிடு குடைச்ச லண்டங் கதிர்மதி யிடியுங்குத்தல்
அண்டிடுந் தாப சோப மருட்பிரள் கடுக்குங்கைகால்
குண்டியும் வாயு பித்தங் கொலைவயி றிடிக்குமுஷ்ணம்
கண்டிரோ ஆண்டே யிந்தக் காரசா ரத்தின் வாறே.
கொச்சகம்
📖 பாடல் எண்: (1187) 📖
குரோசனைகஸ் தூரிபச்சை குங்குமஞ்சவ்வாதுசட்டம்
அறுவகையி னோர்பழந்தான் அறுத்ததனிலுங்குழைத்து
மாறுமணி மாத்திரைகாண் வைத்ததிலுந்தேனுமிட்டுக்
கூறதுவாய் மூன்றுதினங் கொண்டிருக்கலாமறியே.
📖 பாடல் எண்: (1188) 📖
ஆரேழு சன்னியது மாகுமனு பானமதால்
ஈரேழு வாதசுர மிஞ்சிசுர சந்தனிலே
பாரேழு மேபடைத்த பஞ்சாமிர் தக்குளிகை
காரார்க ணேசனருள் கர்மவினை யேகிடுமே.
கலித்துறை
📖 பாடல் எண்: (1189) 📖
கொட்டாவி யிட்டு விக்கலு மேப்பமுங் குன்மக்ஷயம்
ஒட்டாச் சயமீளை உப்பிச மன்ன விரோசனமும்
தொட்டால் வலிவயர் காசமுஞ் சத்தி சுவாசபித்தங்
கட்டோடு சன்னி சுரங்குளிர் குத்தல் கடல்புகுமே.
📖 பாடல் எண்: (1190) 📖
ஆடா தொடைரச மாதண்டைத் தும்பை யதில்பூரசங்
கோடா சாலைரசம் பொற்றலை யிஞ்சிகுறித்திருமூன்
றாறாய சுரசம்வகைக் குப்பலங் கொண்டன்னீரினில்தேன்
நேராய்ச் சரியிடை மாத்திரை யொன்றுநிகழ்த்திடுமே.
📖 பாடல் எண்: (1191) 📖
உரைத்திரு வேளை விழிக்கொரு வேளையோரைந்துநாள்
துரைப்படி நோய்க ளகல்வது நன்றுசின்னாட்கள்சென்றால்
முறைப்படி வற்றிப் புகைகொண்டு நாசிமுடுக்குடனே
மறப்புனல் நீறு நதியாய்ப் பெருகி வழிந்திடுமே.
வேறு – கவி
📖 பாடல் எண்: (1192) 📖
சண்ட மாருதக்கு ழம்பின் வேகஞ்
சதகோடி கோடிவினை சருவிபோங்
கண்ட போதுசுர சன்னி தோஷங்
கடல்புக்கி யோடிவிடுங் காண்கிலார்
விண்ட வேதையிதில் சண்ட மாருதமும்
வெள்ளி செம்பது வெவ் வேறதாய்த்
துண்டு துண்டம்வராக னோரிடையுந்
தூக்கு வாய்தகடு சூக்ஷமே.
📖 பாடல் எண்: (1193) 📖
ரசித மாவதும் ஐவ ராகனெடை
தகடி லிருந்தகுரு காற்பலம்
விசித மாயமுரி யுடனும் வைத்துகுழை
மேலுஞ் செம்பதுமே பூசிடு
கசிடுங் கதிரில்காய்ந் ததின் னுமியில்
காட்டு மஞ்சுமுற மாமெடு
நேசு கீழதுமேல் வன்னி யிட்டுகனல்
நீறி னாலுமியி னேர்மையே.
📖 பாடல் எண்: (1194) 📖
நீறி யாறியது பாருஞ் செம்பினொளி
நேரி துக்குவய தெட்டதாய்
மாறி சீவனமும் வாழ்வீர் நாடதிலும்
வாசி வாவெனவும் ரேசிகாண்
வாரி யோடுநிலை வங்கு சிங்கெனவு மாறி
வாழ்வீர் கண்ட தாரையில்
ஆசி யண்டவரை கீழு மேலுமிது
ஆவி நின்றிடம றிந்திடே.
📖 பாடல் எண்: (1195) 📖
பாரும் செம்பு பசும்பொன்னின் வர்னமது
பரிசை வேதைகுரு பாதைகாண்
வாரி வெள்ளியது வராகநூறு எடை
வாங்கி டுங்குருவிற் கால்பலம்
வேரு மேமுரிவிட் டுமத்தி யதுவெள்ளி
மேலுந் தகடா திதம்
போகு மேகதிரில் வாலை வீசுகனல்
போடு முன்னுமுயல் புடமே.
📖 பாடல் எண்: (1196) 📖
தகடு நூறுவரைக் கனலில் போடபுடந் தவளமென்றநிற ரசிதமாம்
முகடு மேவரா வயசு பத்தரையு மோடி யாகிபொன்னாணிதான்
அகடு மேயிலையார் சீவனஞ்செய்து அம்புவிதனிலும் வாசமாய்
எகடு தன்வார மவுன சாதனையி லெய்தி டுமமுரிமாறிடே.
📖 பாடல் எண்: (1197) 📖
மாறி மாறிவர வாசி யூதிவர வாசி வாசியதும்வீசியுந்
தேது தேறியொரு நாளு நாளுமினி தேக சுத்திசிதறாமலும்
வாரி வாரிகட லாழி யானசல மாற மாறகதிர்வாலைகாண்
சூரி சூரியனுந் தேக தேகமொளி சுரூபசூக்ஷசுகசுத்தியே.
📖 பாடல் எண்: (1198) 📖
வருஷ மொன்றுமதி மாற மாறகதிர்
வர்ன மாமதித வேதைகாண்
புருஷ னோடுரதி போர் மோகமது
போலுங் காரசார போதனை
பரிட்சை யாய்வருதல் காய தேகியெனும்
பாடு பாடுவெகு பாடுகாண்
அருளி லங்குமதி சந்திர புஷ்கரணி
யமிர்த சஞ்சீவியி னாட்டமே.
📖 பாடல் எண்: (1199) 📖
நாலுங் கண்டுவெகு நாள்கள் சென்றுஉடல்
நாடி நாடி வெகு நாளதும்
போலுங் கற்பமுண ரம்பு விதனிலும்
பூத லத்தில்சில ஞானிக
ளாலும் வாதரச போத னைச்செயலி
லாவி தானுஞ்சுடு காடுபோய்த்
தேலுந் தேலிடினுங் கார சாரகுரு
தேடி தேடியலை வார்களே.
📖 பாடல் எண்: (1200) 📖
மாதுயோனிதனில் வாழ்க்கை நாள்சிலது
வாடி வாடிசில மாய்கையால்
ஓது நாள்முழுது மோடி மோடியுழன்
றார்க ளம்புவியி லோர்சிலர்
வாதி னால்சிலது நோய்க ளால்சிலது
வறுமை யால்சிலது நாள்கள்போய்
ஏது காய்ந்தளர்த் தான பின்புசட
மேது நாள்தினமு மில்லையே.
📖 பாடல் எண்: (1201) 📖
சயில மஞ்சும்ரவி கான லுண்டுவர
தானுந் தன்னறிய லாகுமோ
சபில மாதுவின் சார மாவதனில்
சத்தும் சித்தும்விளை யாடலாம்
சயிலங் காணுதக தயிலஞ் சுண்டுஞ்சை
தன்னியத்தில் மனஞ் சாரிடா
சயில மஞ்சுமது தானே தானது
வாய்த்தா தும்வலுவ தாகுமே.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : June 2025
Next Post
👉 8️⃣3️⃣ ஞானவெட்டியான் (1202-1207) 👈