திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
உலகவுற்பத்தி தரு
தனனாந்தனதனனாந் தனதன தனனாந்தன
தனதனதனனா
📖 பாடல் எண்: (0601) 📖
ஈராறுசுற்றமதில்- வன்னி-யெய்துஞ்சலநதிநான்கடந்து
நேராய்வாசிக்குதிரை-அது-நிர்ப்பந்தமாய்ப் பாய்ந்துஓடையிலே
ஆராய்ந்துமுப்பதுபேர்- கயிலை-அதிதசித்தவர்வந்தடக்கையில்தான்
மாராடியேமறித்தார்- வாசி- வல்லமையாலே விசுத்திவந்தேன்
அறுகோணஞ்சுற்றிமதில்- அது-ஆறுபத்துநெருப்பாறருகே
துருக்கல்மண்டபமும்- கனக-சொர்னத்தினால்ரத்தினச்சாவடியில்
திருமூர்த்திமூவருமே- தேவ-சித்தர்களும்வீற்றிருக்கையிலே
கருணைமலர்பொழிந்து- மூவர்-கண்டுமதிழ்ந்துகளிகூர்ந்தனர்- தன.
📖 பாடல் எண்: (0602) 📖
திருவள்ளுவனெனவே- ஞான-திருஷ்டியினாற்கண்டு தேவர்களும்
அருவுருவாய்மதுர- மலர்- வாசம்பொருந்திய ஆசிர்மத்தில்
இருமென்றவர்களுமே- கமல- இங்கிதஞான சுகாதிதத்தில்
உருவாய்ச்சொர்க்கப்பதமே- உப- தேசமுந்தந்து முத்தியளித்தார்
கருணாகடாட்சம்பெற்று- வா-சிக்காரிக்குதிரைமேல்சீனிவைத்து
ஏறிக்கனவேகமதாய்- அந்த-ஈரெட்டுமாமதில்தாண்டியபின்
குறிப்பாய் வருகையிலே- பின்-குவட்டுசித்தர்முப்பத்தாறுபேர்கள்
மறிப்பாய்மறித்திடவும்- வாய்வு-வாசியென்றபொடிதூவிவிட்டேன்- தன.
📖 பாடல் எண்: (0603) 📖
விசுத்தியறுகோணங்- காலி-வேகத்தினால் நடுமையத்திலே
உசத்தியதாயறிந்தேன்- வாசி-ஓகோகமலபீடமருகே
நிசுத்தம்வராமலுமே- கொண்டு-நேசமதாகமயேஸ்பரனார்
வசுத்தசித்தாதிகளும்- திரு-வள்ளுவனேஆசிர்மந்தனிலே
கனகரத்தினபீடங்- கருணை-கமலமலர்பொழிந்தேயருள
நினைவாய்மயேஸ்பரனும்- ஞான-நிஷ்டைதந்துயோக தீட்சைவைத்தார்
இன்பமாயுபதேச- முத்தி- யின்பத்துடன் தந்துஅன்பெனும்
மனதுகளிகூர்ந்து- சொன்-மாமதிமோட்சவரையளித்தார்- தன.
📖 பாடல் எண்: (0604) 📖
தத்துவந்தொன்னூற்றாறும்- அதில்-தசவாய்விலக்கப்பட்டபேர்களையான்
சுற்றத்தாரெண்ணாமல்- இவர்-தூரத்தாரென்றகற்றிவிட்டேன்
சத்தமதிலிருந்து- மூன்று- சாக்கிரவீடுமத்திபமதில்
கத்தரிருப்பிடங்காண்- தெய்வ-கமலமலராயிரத்தெட்டினில்
சித்திரச்சாவடியும்- ரத்தின-திவ்வியமாமணிக்கோபுரமும்
ரத்தினமதில்பதினாறு- ஜீவ-ரத்தினக்கோட்டைசுற்றமதிலும்
பக்தியுடன்வரவும்- வாசி-பதினாறுகலைசூழ்நதியருகே
தெத்துகாத்திடும்பேர்கள்- திரு-வள்ளுவனென்றறியாமலுமே- தன.
📖 பாடல் எண்: (0605) 📖
எழுபத்தீராயிரம்பே- ரெழுந்-தோடிவரும்போதினியாதுகாண்
வழுவாமலேயினிதான்- கவன-வாசிகொண்டுசீனிவைத்ததன்மேல்
இழுத்து அங்குபடி- யானதி- லேறியேசவாரிதூறிடவும்
தொழுதேன்சத்தியனை- துதி-செய்துஆக்கினையிலேகினனே
அருள்பெற்றிலகுசுழி- சத்த- மாக்கினைவந்துஅடிபணிந்தேன்
இருள்போய்நிலவுபொழிந்- தினி-யேக்கமெல்லாம்விட்டுத் தூக்கமற்றுக்
கருவாய்விளங்குநாத- விந்து- கர்த்தவ்வியத்தைக் கண்டேமகிழ்ந்தேன்
பொருளாஞ்சதாசிவமும்- சத்தி-பொற்கமலநாடிப்போற்றி செய்தேன் – தன.
📖 பாடல் எண்: (0606) 📖
கதிர்மதிவான்புவியும்-நின்றுகாத்திருந்துபணியேவல்செய்யும்விதி
மதிநின்றிலகும்- விண்ணு-மண்ணுமுதல்வன்னிவாய்வதுவும்
நதிபதிகாரதுவும்- நவ-கோடிசித்தர்விந்துநாதமதும்
துதிநிதியுமெழுதோற்ற- மதுந்-தொழுதுதோத்திரஞ்செய்து பணிந்திடுங்காண்
முப்பத்துமுக்கோடி- முனி-தேவர்முதல்செந்துமிருகங்களும்
நாற்பத்தெண்ணாயிரம்- ரிஷி-நாரதர்கின்னரர்கிம்புருடர்
இப்படியாயிருக்கும்- இந்த-வேளைதனிற்கண்டுயான் பணிந்தேன்
ஒப்பனையாயெனக்கு- சொர்க்க-யோகதீட்சையுபதேசஞ்செய்தார்- தன.
கலித்துறை
📖 பாடல் எண்: (0607) 📖
யநமசிவ வென்று யான்வாசி யூதிநல்லாக்கினையில்
தினம்வைத் துகண்டத் தமர்வாசல் கீழ்வரைதிசைபிசகா
மனம்வைத்துக் கும்பித்துச் சுழிமூல நாடிவாசிகொண்டு
தினந்துதித் தவரை யண்டத்தில் புக்குத்தெரிசித்தேனே.
📖 பாடல் எண்: (0608) 📖
வயநம சியென்று வாசிகொண் டாக்கினைமதிரவியாய்த்
தயிரிய மாய்க்கண்ட தாரையில் நேசத்தனித்துகந்து
மாய மாமூல வாசியி னாலந்த வட்டத்திலே
செகமாய் மேல்நோக்கி ஆக்கினை புக்குத் தெரிசித்தேனே.
📖 பாடல் எண்: (0609) 📖
சிவயநம வென்று வாசிகொண் டவரைச்சேவித்துமுன்
தவநெறியாய்க் கண்ட தாரை கீழ்நோக்கித்தவறுவரா
முவனச் சுழிமுனை திரிகோண வட்ட மூலத்திலே
தீவர மாயெழுந் தாக்கினை புக்குத்தெரிசித்தேனே.
📖 பாடல் எண்: (0610) 📖
மசிவயந வென்று மூலங் குடிகொண்டு வாசியினால்
வசிபொக்கி ஷங்கொண்டு வாவென்று வாசிமதிரவியில்
துஜராஜ யோகங் கும்பித்து வூதிச் சுழன்றெழுந்து
தெசவாய் வெழுப்பி ஆக்கினை புக்குத் தெரிசித்தேனே.
📖 பாடல் எண்: (0611) 📖
நமசிவ வென்று ஐவரை நாடி நலம்பெறவும்
தமதுலகா தீதம் பரப்பிரம மூலசந்நிதியில்
எமலபி காண மதிரவி கூடி யிசைவுபடத்
திமிர்தச் சுழியில்நின் றாக்கினை புக்குத் தெரிசித்தேனே.
📖 பாடல் எண்: (0612) 📖
ஐவர் தெரிசனஞ் சத்தி சதாசிவ மருசுருவும்
பைவினை நீக்கி மதிரவி கற்பம் பழுதுவரா
தைபிறை கொண்டு தசதீட்சை பத்துஞ்சார்ந்திடிலோர்
வையகம் வானம் புவிமுதற் கொண்டு வசியமதே.
கொச்சகம்
📖 பாடல் எண்: (0613) 📖
பராபரையொன் றாலெடுத்த பஞ்சகர்த்தா ளைவரையும்
தராதலமீரேழுமுயிர்ஜாதியொன்றாண்பெண்ணல்லவோ
நிராதரத்துள் ளேயிலகும் நீர்மேல்நெருப்பென்றறியார்
துராகதமாய் வெவ்வேறு சொன்னார்சு லோகமதே.
📖 பாடல் எண்: (0614) 📖
அல்லாகு தாவெனவு மைந்துகரம் வைத்துப்பணிந்
தில்லில்லா வெனத்துதித்து வினிமுடிசாய்ந் தேதொழுவார்
சொல்வா ருபதேசம் சூதர்களுஞ் சூலைவைத்து
வெல்வார்ஞா னப்பிரசங்கம் வெகுகிறிஸ் தவர்மனமே.
📖 பாடல் எண்: (0615) 📖
ஆத்துமம்பி ரிந்ததின்பின் னதிலிருப்ப தென்னவயம்
பூத்தான மாய்ப்புதைத்துப் போட்டுரவை சல்லாவே
சாற்றுமலர் பொழிந்து சாய்ந்துமுடி தானசையக்
காத்துசலாஞ் செய்தெங்கள் கர்த்தனே யெனத்துதிப்பார்
📖 பாடல் எண்: (0616) 📖
உங்கள் தெய்வ மெங்கள்தெய்வ முண்டெனவும் வேறுசெய்து
அங்கங்கள் வேறுளதா யாகமங்க ளுற்பவித்தார்
பங்கமதாய் வேறுசெய்யும் பாதகரே யங்குமிங்கும்
எங்கெங்கு மாய்நிறைந்த ஈசனென் றறிகிலீரே.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
Next Post
👉 3️⃣9️⃣ ஞானவெட்டியான் (617-635) 👈