திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
உலகவுற்பத்தி தரு
தனனாந்தனதனனாந் தனதன தனனாந்தன
தனதனதனனா
📖 பாடல் எண்: (0593) 📖
ஞானசிகாமணியே- தெய்வ- நாயகனால் ஜெகமாதிதமும்
வானமும்புவியுமுதல்- மதி-சந்திரனும்ரவிசூரியனுங்
காணவொளிவீசும்-கார்-மேகங்களுமிடிமின்னல்களுந்
தானாய்விளங்குமுயல்- மாரி-தாபரமும்வாய்வுசாகரமுஞ்
சேனாதிபதியிலகும்- சத்த-தீவுதீவாந்தரசெந்துகளுஞ்
சோனையருவிவளர்- சுழல்- சோதிப்பிரகாச விருட்சங்களும்
தேனூறல்பாயுமந்த- சல- செம்புநதிமகமேருகளும்
பானுகனல்சொரியும்- தன்னி-பாயுஞ்சூதரசக்கேணியுமே- தன.
📖 பாடல் எண்: (0594) 📖
நவரத்தினம்விளையுந்- திவ்விய-நாகரிகசெந்துநாடுகளும்
எவ்வர்னமாய்விளங்கும்- சந்திர-இந்திரபட்சியன்னபட்சிகளும்
புவனங்களில் மிகுந்த- அண்ட-பூச்சக்கரவாளகிரிசூழிடமுங்
கவனாதிராக்ஷதர்கள்- பிறவி-கந்தருவதேவகந்தருவர்
பவனமளாயிடுவர்- பகி-ரண்டமளாவியகவனாதிகள்
தவத்தில்மிகுத்தவம்- ஏழு-சங்காரஞ்சூழ்நடுரோமபுரி
சிவஞானசித்திபெற்ற- குளிகை-சித்தர்கள்வாழுமதீபாந்தரமும்
புவனஏமகிரியுங்- கெந்தி-மாமலைராக்ஷதரூபகமே- தன.
📖 பாடல் எண்: (0595) 📖
பொதிகைநகரெனுமே-இந்தப்-புவனஞ்சூழ்சாகரமத்திபத்தில்
அதிதமென்னாலருள- மெத்த-அதிசயரோமாபுரிநகரில்
நதிசூதக்கேணியொன்று- அது-நற்சதுரம்நூறுகாதவழி
மதிகோடிரப்பையொனி- ரவி-மாமதிக்குக்கதிரொட்டியதாய்
விதியாலமைப்பதென்ன- அண்ட-மேருவுஞ்சுற்றிமதில்சூழ்ந்திடும்
பதியாயுதித்திடுங்காண்- பஞ்ச-கர்த்தரிருப்பிடமஞ்சுசபை
கெதிவாள்கயிலாசகிரி- சுற்றிக்-கேணியொன்றுசூதவாசலாங்
கொதிதான்கொதித்திடுமே- சித்திரைக்-கோடைதனில்சித்தர் கொண்டுபோவார்-தன.
📖 பாடல் எண்: (0596) 📖
என்னுஞ்சிரஞ்சீவிதான்- அந்த- ஈசனருள் காயசித்தி பெற்றோர்
மண்ணும்விண்ணுள்ளளவும் – தேகம்- மரணமவர்க்கொருகாலமில்லை
உண்ணுமறுசுவையில்- அப்பு- உப்பொன்றுமாகாதிருப்பவர்காண்
தின்னும் பதார்த்தங்களில்- ஜீவ- செந்துவகைகளுயிர்வகைகள்
உண்ணும்படியகற்றி- யோக- சாதனையில்நித்திரையொன்றறியார்
அண்ணலருள்பதமே- நித்திய- மர்ச்சித்துமூல அமிர்தமுண்பார்
கண்ணைமூடியறியார்- மவுனக்- கண்ணாடிமீதில் கருத்துணர்வார்
சென்னாட்டமாயிருந்து தெசதீட்சைபெற்றுக்கவனம்பாய்ந்திடுவார்- தன.
📖 பாடல் எண்: (0597) 📖
சதாசிவசாம்புவனால்- ஜெகந்- தானேபடைத் துயிருண்டாச்சு
இதானவாற்றிந்திடிலோர்- புவி- யெழுவகைத் தோற்றநால் யோனியுமே
தாகமத்தினுற்பத்தியால்- பரை- சோதியொளியில் சுயம்பதுவாய்
நிநானமாவ தெறும்புகடை- யானை- யாவதுவே முன்பின்னேக முயிர்முதலாய்
விதாவிதங்களானபல- விந்து- நாதமது விளைவானதுகாண்
குதாவெனும்பரைச்சாம்புவனால்- அண்ட- கோளகைவடவாக்கினி
மதாவினோத பேதமதால்- வரும்- வந்தவழியறிந்திந்தவிதம்
இதார்த்தமாக இனியுரைக்கும்- எங்கள்- தெய்வம்வேறா உங்கள் தெய்வம்வேறோ- தன.
📖 பாடல் எண்: (0598) 📖
உலகம் பிறந்தவிதம்- பரை- யுந்திதனில் பிர்மயேந்திரங்காண்
கலகப்பிரியர்கூடி- புராண- கட்டளைவெவ்வேறு பிரித்துணர்வார்
அலகையதினளவா- லான- அச்சது வேயறிந்துச்சிதமாய்ச்
சிலபேர்மதபேதங்கள்- மனு செய்கையினால் விதிநூல்களுமே
பலபேர்கள்கூடி- பரி- பாஷை யறிந்து பகர்ந்திடிலோர்
நிலவுபொழிமதுரஞ்- செக- நீடுலகாதிதமே தழைக்கு
முலகாதிதம்புகழும்- திரு- வள்ளுவசாம்புவனுற்பவத்தைப்
புலையனென்றே யுரைத்த- மவுனப் பொக்கிஷமே ஞானகக்கிஷங்காண்- தன.
📖 பாடல் எண்: (0599) 📖
அம்பிகையின் பொற்கமலம்- பணிந்- தர்ச்சனை செய்து அடியனுமே
நம்பிதிராவியத்தை- மூல- நாதவிந்தையுண்டு நான் வெளியாம்
தும்பிமுகனருளில்- துரியந்- துரியாதீதங் கடந்தே துதித்துத்
தம்பித்திடைகலைபின்- மூலஞ்- சாதித்து வாசிகொண்டே யிழுத்துக்
கும்பிதனிலிருந்த- ரத்தினங்- கோடானுகோடி திரவியத்தைச்
செம்பொனருள் பொருளும்- இனி- சித்திக்க வாசிகொண்டே திறந்தேன்
பம்பகமாயிருந்த- கொல்லர்- பத்துந்தகவாயுவு நித்திரைசெய்து
தெம்பாயிருக்கையிலே- திவ்ய- செங்கநதி யகழிதாண்டி விட்டேன்- தன.
📖 பாடல் எண்: (0600) 📖
மூலாதாரங்கடந்து-முனை-முச்சுடர்வட்டமதில்கடந்து
பாலமது கடந்து- வாசி- பாய்ந்துவிட்டேன் சதுஷ்கோண
ஞாலத்திலேஅறிதல்- பிரம- ஞானசுவா திஷ்டானங்கடந்து விட்டேன்
சிலம்பொழியும்ரத்னந்-திரு-மால்மணிபூரகமீதருகே
சந்திரபுஷ்கரணி- திவ்விய-சாவடிசித்திரமண்டபத்தில்
இந்திரசுரூபசித்தி- பெற்ற-எமனாட்டுச்சித்தரிருபதுபேர்
வந்துமறித்தார்கள்- போட்டேன்- வாசிக்குதிரை மேலங்குபடி
அந்தரமாயெழும்பி- சவாரி-யனாகதக்கோட்டைமுக்கோண வட்டந்- தன.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
Next Post
👉 3️⃣8️⃣ ஞானவெட்டியான் (601-616) 👈