சூன்ய தரிசனம், ஞானமடைதல், சமாதி சாதித்தல் விளக்கம் என்ன?
🌹 ஒருவர் சூன்ய தரிசனம் செய்து விட்டார் என்றால் இந்த கேள்வியே எழும்பாது.
🌹 ஏனென்றால் ஞானம் அடைதலும் அதற்குள்ளேயே நடக்கிறது.
🌹 மனம் அமைதியாகி சமாதி சாதிப்பதும் புரிகிறது.
🌹 ஒரு மனிதன் தன்னுடைய முழு ஆற்றலையும் வீச்சையும் தனக்குள் அடக்கி விட்டான் என்றால் ,
🌹 கண்கள் பார்ப்பது அதனுடைய இயல்பு என்றால் கண்கள் பார்க்காமல் இருப்பதும் அதனுடைய இயல்புதான்.
🌹 ஒரு காட்சியைக் காட்டினால் கண்களால் பார்க்காமல் கூட இருக்க முடியும்.
🌹 அப்படி இருப்பவனால் உச்சகட்டத்தில் அவனுடைய மனதை அடக்க முடிகிறது.
🌹 அதனால்,அவன் சூனிய தரிசனம் செய்கிறான்.
🌹 அதனால் ஞானம் அடைகிறான்.
🌹 இதற்கு புலன் அடக்கம் என்றும் ஒரு பெயர் இருக்கிறது.
🌹 சதா சர்வ காலமும் எழும்பிக் கொண்டே இருந்த உன்னுடைய எண்ணம் விகழ்பம் இல்லாமல் அடங்கி விட்டது.
🌹 கிட்டத்தட்ட செத்தவரை போல மனம் அடங்கி விட்டது.
🌹 சமாதி சாதித்து விட்டான்.
🌹 சூரிய தரிசனம் பெற்றுவிட்டான்.
🌹 இவையெல்லாம் ஒரு மனிதனுடைய உச்சகட்ட அனுபவம்.
🌹 அதனால் ஒரு மனிதன் எதை அடக்குகிறானோ, இல்லையோ தன்னை அடக்குவது தான் பெரிய விஷயம்.
🌹 சூன்ய தரிசனம், ஞானமடைதல், சமாதி சாதித்தல் என்று வார்த்தைகளில் வேறு வேறு இருந்தாலும் அனுபவம் ஒரே நேர்கோட்டில் தான் செல்கிறது.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : March 2025