பக்தி, உடல் ஆரோக்கியம், சலியாத மனம், அன்பான துணை
- இறைவன் உங்களை எப்போதுமே மறப்பதில்லை, மறந்தால் உங்கள் இதயம் துடிப்பதில்லை
- வளமையானால் பக்தி வரும்
- பால்பேதமற்ற நட்பு, கல்வியறிவோடு நட்பு, இளமை, வளமை, வயதோடு இருப்பது பக்தி
- வயதான பிறகு வருவது பக்தியல்ல, எல்லா புலன்களும் கெட்டபிறகு வருவது பக்தியல்ல பயம், பக்தி என்பது உடம்பிற்கு செய்வது
- செல்வத்தை செலவு செய்துதான் ஆக வேண்டும்
- இறைவனின் உறைவிடம் உடம்பு
- உடல் ஆரோக்கியம் ஒரு செல்வம், உடம்பில் உயிராய் இருப்பதே கடவுள், உன் உடல் விசேஷமாகவும் உணர்வோடும் இருப்பதற்கு காரணம் கடவுள்
- உடல் ஆரோக்கியமானால் மனம் சலிக்காது
- நீயே மூலதனம் உன்னிலிருந்தே தொடங்கு
- புறம் போனவர்கள் புறம்போக்கு
- பக்தி இருந்தால் வீடுபேறு அடையும் வழி கிடைக்கும்
- பக்தி வந்தால் அனுபவிப்பதில் ஆர்வம் பிறக்கும்
- கற்றுக் கொண்ட நான் நான் அல்ல, கற்றுக் கொள்ள முடியாத அளவு தெரிந்து வைத்திருக்கின்ற நான் ஒன்று உன்னுள்ளே இருக்கிறது
- உன்னிடம் கேட்டுப்பார் நிறைய பதில்கள் உண்டு, ஆனால் உன்னை மட்டும்தான் நீ கேட்கமாட்டேன்கிறாய்
- தூக்கம் என்பது சரணாகதி
- கேடு இல்லா செல்வம் கல்வி மட்டுமே
- மேற்கண்ட செல்வங்களோடு இருந்தால் அன்பான துணை அமையும்
- வாழ வந்திருக்கிறாய் வாழ்ந்துவிட்டு போ
- எல்லோரும் பதினாறு பேறும் பெற முடியும்
- எல்லாமும் நீ கொண்டாடுவதற்காகவே படைக்கப்பட்டிருக்கிறது, நீதான் கவனிக்காமல் இருக்கிறாய்
- எல்லாவற்றிற்கும் நன்றி சொல்ல கற்றுக்கொள்
- எப்போதும் இறைவன்மீது நாட்டமாக இருங்கள்
குரு சிவயோகி