வளமை, இளமை, வயது
- வளமை வந்தால் இளமை வரும், இளமை வந்தால் வயது வரும்
- நட்பைக் கொண்டு வளமாக்கு
- வளமை வேண்டுமெனில் இளமை வேண்டும்
- கல்வி இருந்தால் வயது தடையில்லை, கல்வி இருந்தால் வளம் வரும்
- வளமற்றுப் போனாலும் பலமற்றுப் போகாதே
- படித்தாய் நட்பு பாராட்டினாய் வளமானாய் இளமை வந்து வயதை நிறுத்திக் கொள்ளலாம்
- வளமானால் நட்பு வட்டம் அதிகம்
- முயற்சியை மட்டும் மூச்சு போல் சுவாசி, முயற்சியை எறும்பிடம் கற்றுகொள்
- உனக்கொரு காலம் இருக்கிறது அதுவரை காத்திரு
- கடவுளை தெரிந்து கொள்ளாமல் சாகும் யாரும் கல்லாதோரே
- கல்வி கற்றால்தான் பதினாறு செல்வங்களும் தங்கும்
- கற்றுக் கொள்ளும் (கற்பகம்) இடம் சென்று கற்றுக் கொள்
- குண்டு சட்டியில் குதிரை ஓட்டு
- நான்தான் மாற வேண்டும், உலகம் மாறாது
- இவ்வுலகம் ஓர் விளையாட்டரங்கம் என்பது கற்றோருக்கே புரியும்
- ஊக்கமது கைவிடேல்
குரு சிவயோகி