(குருவும் – ஞானியும்) : Video Start From : ⏰(00 : 00 : 18)⏰
குருவும் – நானும் – நீயும் அறிமுகம் :
பாடல் : 1 – Video Start From : ⏰(00 : 08 : 11)⏰
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்
ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்
கரியதோர் எழுத்தையுன்னி சொல்லுவேன் சிவவாக்கியம்
தோஷ தோஷ பாவமாயை தூரதூர ஓடவே.
பாடல் : 2 – Video Start From : ⏰(00 : 12 : 39)⏰
கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்
கலைகள் நூல்கள் ஞானமுங் கருத்தில்வந்து உதிக்கவே
பெரியபேர்கள் சிறிய பேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்
பேயனாகி ஓதிடும் பிழை பொறுக்க வேண்டுமே.