திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
கலித்துறை
📖 பாடல் எண்: (0636) 📖
புத்திமதி யில்லாமல் வெடிகோடி மந்திரம் புலம்பியுமே
சத்தியில் வாழ்ந்து தியங்குவர்காண் சர்வ லோகமெல்லாஞ்
சுத்தி தசாதியின் பேதகந் தன்னைச் சொல்லுமவர்
எத்திப் பணத்தைப் பறிக்குந் திருட ரியம்புவனே.
விருத்தம்
📖 பாடல் எண்: (0637) 📖
மண்டலத்தில் குருக்களென்று பேறும் பெற்று
மகத்தான தூளிதம ணிந்து கொண்டு
குண்டலங்கள் செவியிலிட்டுக் குல்லா சாத்திக்
கோகரணங் கெசகரண மிரண்டுங் கற்றுத்
தெண்டிரையிற் பலவிதமாய்ப் பொய்கள்சொல்லிச்
சீஷருக்கு முபதேசந் தெளியச் சொல்வார்
ஒன்றுமில்லை யவர்கள் கையில் வித்தை யாச்சு
உள்ளவர்த்த மானமிதை யுரைசெய் வேனே.
📖 பாடல் எண்: (0638) 📖
நேத்திரத்தில் துகில்வாங்கி யுடுத்திக் கொள்வார்
நின்றவரை வல்லியென்றுந் துரத்திக் கொள்வார்
கோத்திரங்கள் விளங்கமுத்தி தருவோ மென்று
கூறுசொல்லி நீறதனைக் குழைத்துச் சாத்தி
சாஸ்திரத்தைச் செவிதனிலு மாண்டே கேளீர்
தவமாகு மஞ்செழுத்தைச் சாற்று வார்கள்
சூத்திரத்தை யின்னதென் றறிந்து பார்க்கச்
சொல்லரிய வைம்பூத மாச்சு தாண்டே.
📖 பாடல் எண்: (0639) 📖
உற்றுநின்ற சாஸ்திரத்தைப் பார்த்துப் பார்த்து
ஊணுகிடை யாமலுந்தான் பிரட்டிப் பேசி
பத்தரென்றுங் குருக்களென்றும் வகுத்துச் சொல்வார்
பரகதியுந் தருவமென்று பணம்ப றிப்பார்
வித்துநின்ற விடங்காணார் வேருங் காணார்
விளங்குபரந் துலங்குகின்ற வீடுங் காணார்
எத்தவமுந் தருளமென் றுலகஞ் சுற்றி
யெளியோர்கள் பாவமெல்லா மினிக்கொள் வாரே.
📖 பாடல் எண்: (0640) 📖
உடலெடுத்த நேர்மைகண்டால் குருக்க ளாகும்
உள்ளுணர்ந்து பாராதார் மருக்க ளாகும்
செடமெடுத்த வுயிர்கள் கண்டால் தீட்சை யாகுஞ்
செயலறியார் குருபூசை தெளிந்து கூடார்
குடலெடுத்த பசியறியறிந்தா லாசா னாகுங்
குறிப்பறிந்து கொள்ளாதார் போசா னாகும்
சுடலடுக்குங் கணக்கதுவு மான தாலுஞ்
சொல்லுகிறேன் மந்திரமும் நில்லா தாண்டே.
📖 பாடல் எண்: (0641) 📖
அடியான பாதமதும் வளர்ந்த தெங்கே
ஆதிநட னம்புரிந்த தந்தை யெங்கே
வடிவான மூங்கிலெங்கே வட்ட மெங்கே
வளர்ந்ததெழுந்த ஆயிரத்தெட் டிதழு மெங்கே
கொடியான மகமேரு வளர்ந்த தெங்கே
குருவென்றுஞ் சீஷனென்றும் பிறந்த தெங்கே
முடிவான சிரமெங்கே சடல மெங்கே
முதலிருந்த குருவெங்கே அழைத்த தேதோ.
📖 பாடல் எண்: (0642) 📖
ஓதுகின்ற வேதமது பிறந்த தெங்கே
உன்னியநீ ரிறைக்குமிட முயிரு மெங்கே
வாதுகள்செய் மந்திரமும் பிறந்த தெங்கே
மறைவேத சைவர்களும் பிறந்த தெங்கே
சூதுகள்கண் டிவையறிந்தால் குருக்க ளாகுந்
தொல்லுலகி லறியாதார் நம்மி லொன்று
ஏதுமில்லாப் பொய்களவு சொல்வார் காணும்
இவைராஜ யோகியென்று மியம்ப லாமே.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
Next Post
👉 4️⃣1️⃣ஞானவெட்டியான் (643-655) 👈