குரு
- என் குரு சிவவாக்கியர்
- ஒரு சீடன் எதை கேட்டு வருகிறானே அதை தருபவர் குரு
- குருவை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை
- எப்போது நமக்கு ஒரு விஷயம் தெரியாமல் நிற்கிறோமோ அப்போது வழிகாட்டியாய் வருபவர் குரு
- ஆன்மீகத்தில் குரு விசேஷம், குரு என்பவர் குருட்டை (அறியாமையை) நீக்குபவர்
- எல்லா கேள்விகளுக்கும் விடை தருவது கல்வி
- எல்லாவற்றிலும் ஆன்மீகத்தன்மை உண்டு, ஆன்மீகம் இல்லாத ஒன்று இல்லவே இல்லை
- எந்த ஒரு செயலின் தொடக்கமும் இறைமையோடுதான்
- இறைவனை புரிந்து கொண்ட மனிதன்தான் இன்னொருவருக்கு இறைவனை புரிய வைக்க முடியும்
- குரு என்பவர் பிரம்மாவிற்கு நிகரானவர், குரு என்பவர் வரையறைக்குட்பட்டவர் இல்லை
- குருவை தேர்ந்தெடுப்பது இந்த காலத்தில் அவசியமாகிவிட்டது, குருவிற்கு இலக்கணம் உண்டு
- கடவுள் என்பது ஒன்று அதை அடையும் ஒரே வழி நீங்கள்தான்
- கடவுளை புரிந்து கொள்ளாமலே குருக்கள் ஆகிவிடுகின்றனர்
- எந்த துறையில் குருவை தேடுகின்றீர்களோ அந்த துறையில் அவர் ஞானம் பெற்றிருக்க வேண்டும்
- ஒரு குருவை சீடனுக்கு தெரியும்
- கடவுளை புரிந்துகொள்வது வேறு, கடவுளை புரிய வைப்பது வேறு
- புரிந்து கொண்டவர் புரிய வைப்பது வேறு, புரிந்து கொள்ளாமலே புரிய வைப்பது வேறு
- கடவுள் புரிந்து கொண்டவர் கண்கள் இமைப்பதில்லை, கடவுள் புரிந்து கொண்டவர் எதற்கும் பயப்படுவதில்லை
- நீங்கள் அவரை நினைப்பது பற்றி அவருக்கு அக்கறை இல்லை
- இறைவன் அனைவருக்குமானவன்
- ஒருவர் தன்னைத்தானே குரு என்று சொல்லிக்கொள்வதில் இல்லை, சீடர்கள் குரு என்று அங்கீகாரம் கொடுக்கும் போதே அவர் குரு
- குரு என்பது இலக்கு அல்ல
- ஒரு மனிதருக்கு கடவுள் புரிந்திருக்க வேண்டும் என்பது அவசியம், ஆனால் எல்லா மனிதருக்கும் கடவுளை புரிந்து கொள்ளும் தகுதி இல்லை
- கடவுளை புரிந்து கொண்ட மனிதர்களுக்கெல்லாம் போதிக்கும் தகுதி இல்லை
- நீங்கள் இருக்கும் இடத்தில் கடவுள் இருக்கிறது, நீங்கள் இருக்கும்வரையே பாதை இருக்கிறது
- உணர்வுப்பூர்வமான மனிதர் குரு இல்லாமலே கடவுளை அடையலாம்
- குரு என்பவர் சீடனுக்கு சரியான பாதையை வகுத்து தருபவராக இருக்க வேண்டும்
- ஒரு கடவுள் ஒரு பாதை, அந்த பாதை வேறு யாருமல்ல நீதான்
- நீ இறைவனை அடைவதற்காகத்தான் உன் உடம்பை பெற்றிருக்கிறாய்
- உண்மையை, இந்த பிரபஞ்சத்தை புரிந்து கொள்வதற்காகத்தான் இந்த உடம்பு கொடுக்கப்பட்டுள்ளது
- இறைவனை புரிந்து கொண்ட பிறகு வாழ்வதுதான் வாழ்க்கையே
- கடவுளை புரிந்து கொள்ள வாழ்க்கையை விடவேண்டிய அவசியமே இல்லை
- குரு என்பவர் தெளிந்த ஞானத்தோடு கடவுளை புரிந்து கொண்டவராக இருக்க வேண்டும்
குரு சிவயோகி
யோகக்குடில் / 9710230097