திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
மனோதிடங் கூறல்
(தரு)
தனந்தனந்தனதானானே- தன-தனந்தனந்தனதானானே.
📖 பாடல் எண்: (1313) 📖
இருதுடையரவம்பாம்பதுகடிக்க- மருந்
தெவருமறியாரிவ்வுலகுதனில்- அருள்
விரகமதுகாமக்குரோதமெனும்- விஷம்
விக்கிரமெனுமறிந்திடுமனமே- தனந்.
📖 பாடல் எண்: (1314) 📖
நிலவுபொழியுமதிசந்திரகலை- வரு
மிரவுபகலதுமாறிடவுங்- கனல்
மனமுஞ்சலமது நீரதுபாய்த- லலை
கடறிமிதுக்குநிகரராமனமே- தனந்.
📖 பாடல் எண்: (1315) 📖
சுழியின்முனையிலகும்நடுவணைகாண்- சொன்ன
துரியமதிநிலவுபொழியவரும்
விழியினொளியுமறைமதிசலநீர்- விட்ட
விதியென்னவிந்துநீராமனமே- தனந்.
📖 பாடல் எண்: (1316) 📖
பஞ்சபூதாதியஞ்சும்பரவெளிதான்- அப்பு
பருதிமதியிரண்டும்பழகினதால்- நெஞ்சுப்
புண்ணாகிடுங்காண்கடுங்காரம்- நின்ற
நிர்மலம்போக்கிடுங்காண்மனமே- தனந்.
📖 பாடல் எண்: (1317) 📖
மும்மலம்போக்கிடுமுப்பாழ்மூலசுத்தி- முதல்
முத்திசித்தியுமெய்தல்முனைகாணல்- அருள்
ஞானசித்தியெய்தல்காயசித்தி- ரவி
நடனமென்னாலருள் நாமுரைப்போம்- தனந்.
கொச்சகம்
📖 பாடல் எண்: (1318) 📖
அண்டமெல்லாஞ் சூழ்ந்துநின்ற ஆதித்தனென்றேயறிய
மண்டலமெல் லாமொளிவாய் வளர்பிறையின்சூக்ஷமதைக்
கண்டேன் மதிமலர்பார் கனகவம் பலத்தினருள்
உண்டேன்வெண் சாரையதை யோகசித்தியாலறிந்தே.
📖 பாடல் எண்: (1319) 📖
சித்திதரு ஞானவெட்டி செங்கந்தி யாற்றருகே
சத்தியமாம்வே தாந்தவொளி தாய்பலத்திலேதுதித்து
முத்தியாமுப் பாழ்கடந்து மூலசுழி தன்னருகில்
மத்தியத்தில் நின்றுமதி வாமப்பா லுண்டேனே.
📖 பாடல் எண்: (1320) 📖
சொல்லப்பா காவதனில் சுகபோக வேளை தனில்
வெல்லப்போ காதுகண்டாய் வேதாந்த கற்பமதை
அல்லல்போ வென்றுலகி லலைவதனாலாவதுண்டோ
வல்லமையால்கொங்கணர்க்குவாய்த்ததுகாணிப்பொருளே.
📖 பாடல் எண்: (1321) 📖
எத்திசையு மேபுகழு மிந்திரன்த னக்குரைத்த
புத்திநிலை யாமலுமே புதுமைகேட் டிருந்தகமை
சத்திதனை விட்டுலகில் தடுமாறி யேதவிர்த்த
வெற்றிபெற்றகொங்கணர்க்குவிரித்துரைத்தார்வள்ளுவரே.
📖 பாடல் எண்: (1322) 📖
தாயார் சரஸ்வதியுந் தந்தையெனும் பிர்மாவாம்
மாயாப் பிறவியினால் வந்தார் புவியதனில்
ஓயாக் கவலைபெற்று வுடன் றுலகில் வாழாமல்
நாயாம் பிறவிதன்னைக் கற்பத்தால் கண்டேனே.
📖 பாடல் எண்: (1323) 📖
கொள்வதுமெப் படியெனது குருவருளேயென்றுநம்பி
உள்ளமதி கலங்கி யுலகி லுலவுவதேன்
கள்ளமல்ல இந்நூல் கசடர்தனக் கெய்துவதோ
வள்ளுவனார் தாமுரைத்த வசனமதி தப்பாதே.
விருத்தம்
📖 பாடல் எண்: (1324) 📖
கொள்வதென்ன மூலமென்ற காரந் தள்ளிக்
கொண்டிடவுந் தினந்தோறு மாண்டஞ் சாச்சு
தள்ளுவது மெண்ணய்சுன்னங் கடுகோ டுள்ளி
சாதித்து வருந்தையிலும் பேதி காணும்
அள்ளுவது மூலமென்ற புளியை மாற்றி
அந்தியிலும் புளியருந்தி யருளை நோக்கிக்
கள்ளமல்ல வீரமுண்டா லஞ்சாண் டாகில்
கடினமெத்த ஏழுதிங்கள் கருத்த தாமே.
📖 பாடல் எண்: (1325) 📖
கன்னியெனு மம்பிகைப்பெண் வடிவென் தாயார்
கல்வியிலு முயற்சிமெத்த காம ரூபி
உன்னிதமாய்ப் பூருவத்தில் மூலத் தாய்தான்
ஓங்காரத் துள்ளொளியா யுலவு மாத்தாள்
வன்னிஎனும் வலையறுத்து மேரு தாண்டி
வாசியிலுஞ் சிவயமென வைத்து வூதிச்
சென்னியெனுங் கருணைகொண்ட மூலத் தாயைத்
தேடுதற்கு மிகவரிது செப்பு வேனே.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : June 2025
Next Post
👉 9️⃣2️⃣ ஞானவெட்டியான் (1326-1333) 👈