திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
முப்பு முடித்தல்
தரு
முப்புமுடிந்ததுகாண்- மூலம்புளி
முப்புமுடிந்ததுகாண்.
📖 பாடல் எண்: (1411) 📖
கம்பியுப்புபதினாறுபலமதில்
காட்டிடுஞ்சுன்னங்கலக்கவுமூட்டியுந்
தும்பிமுகன்பதம்போற்றியாடுபின்பு
தொந்தித்துக்கிராசமுந்தூவிக்கடைந்திடே- முப்பு.
📖 பாடல் எண்: (1412) 📖
அஸ்வகெந்திக்கிழங்கவ்விதவேரினால்
யிசைவதாகவிருசாமம்வறுத்துடன்
பஸ்பமாகும்பருதியொளிவுபோல்
நிசமதாகுநிலைகண்டறிவதே- முப்பு.
📖 பாடல் எண்: (1413) 📖
பச்சைப்பனையதினேடுசெந்தூரிகம்
பழையசட்டிதனில்நடுவைத்துகாண்
உச்சிகம்புகழ்செந்தூரந்தன்னிலும்
அச்சமிலாவிந்துநாதம்விட்டாட்டிடே- முப்பு.
📖 பாடல் எண்: (1414) 📖
நாதவிந்துநீர்விட்டொருசாமம்
நேரஆட்டிவிடாமலுங்காசுபோல்
தீதில்லாமல்ரவிமுகங்காட்டியும்
பேதமில்லாமல்செந்தூரத்தில்மாட்டிடே- முப்பு.
📖 பாடல் எண்: (1415) 📖
சட்டிமேலுஞ்சந்தில்லாமல்சீலைமண்
கெட்டியாய்க்கவசங்களுமேலதாய்ச்
சட்டியில்லங்காற்றில்லாமலும்படி
முட்டிவன்னிமுதல்சதுர்சாமமே- முப்பு.
📖 பாடல் எண்: (1416) 📖
ஒட்டியேகமலாக்கினிதீமிதம்
யோகநாதவாலாம்பிகைதன்பதம்
வெட்டியால்வீரசாம்பவமூர்த்தியால்
அட்டியில்லாமலென்னாண்டேமுடிந்ததே- முப்பு.
📖 பாடல் எண்: (1417) 📖
கர்த்தனருள்கருவங்கசெந்தூரமும்
நித்தம்பூசித்துடன்நின்றறிவோர்கள்தான்
சித்தியெய்துஞ்சிவசத்திபொற்பதம்
முத்திமோட்சமெய்ஞ்ஞானம்லபிக்குமே- முப்பு.
📖 பாடல் எண்: (1418) 📖
இந்திரனுமதிரவியுங்கதிரொளி
சந்திரசூரியர்விந்துநாதஞ்சேர்ந்து
இந்தவெண்சாணுடல்பஞ்சபூதங்கூடி
ரஞ்சிதஉப்புநவலோகநீற்றுமே- முப்பு.
📖 பாடல் எண்: (1419) 📖
நீலமேகவர்னமாலின்மதிமலர்
வாலைரூபிவடிவம்பிகைதன்செயல்
மூலாதாரமுமண்டலஞ்சூழ்மதி
ஆறாதாரமமைத்தாராண்டையே- முப்பு.
📖 பாடல் எண்: (1420) 📖
கற்பகோடிகற்பசோதனைசெய்கினும்
உற்பகங்களொருவரறிகிலார்
சற்பமாவததுகடித்தேவிஷம்
கைத்தால்ஞானங்கரைகண்டறிவரே- முப்பு.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : June 2025
Next Post
👉 1️⃣0️⃣0️⃣ ஞானவெட்டியான் (1421-1430) 👈