திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
கொச்சகம்
யோகஜெயம் ஏலப்பாட்டு
தரு
ஏலேலோ ஏலேலோ சிவசிவ ஏலேலோ ஏலேலோ.
📖 பாடல் எண்: (1381) 📖
கதிர்மதிசூழ்கமலவிதழ்- இடையின்
கலைசுழலுங்கருணைமலர்பொழியும்
விதிகருவூர்நகர்செழிக்கும்- மெய்ஞ்ஞான
வெட்டியருள்வேதாந்தகற்பஞ்சுழியின்
முனையருள்புரியும்பரி- பூரணகற்பந்
துரியாதிதமுமதியிலறிந்தேதான்
பொழியமிர் தமதுரரசபாண- மதினாலும்
புகழ்விஜயமாண்டுபனிரெண்டளவுந்தேறித்
தொழிலனேகமகாராஜயோகமதில்வாசி- சூக்ஷ
சடாதாரமதுமீராறுந்தாண்டி
வழிபலசுகாதிதசுகசோதி- மணிவாசல்
வாலையபிராமிமலர்ப்பாதந்தெரிசித்தே-ஏலேலோ.
📖 பாடல் எண்: (1382) 📖
திருவமிர்மதிமலர்சூழ்- மருவீர்
செழித்தவளர்தேன்பொழியும்புனல்
மருவும்விந்துநாதசத்தி- செனித்த
வாறுதன்னையானருளமூலமணி
பூரகமனாகதம்வீசுத்தி- மூடுதுறை
யாக்கினைசுகாதிசுடர்தாண்டி
மேலும்வரையாறுதிருவாவடுதுறை- தாண்டி
விக்கிரமவியானனையஸ்வமதாய்ப்பூட்டி
ஞாலமதில்கூர்மமெனுஞ்சீனியதை- மாட்டி
நாடியதனஞ்செயனையங்கும்படியாக்கி
வாலையருள்பொற்கமலபாதந்- தொழுதேதான்
வாசிதனிலேறிமதியமிர்தநதிபாய்ந்தே- ஏலேலோ.
📖 பாடல் எண்: (1383) 📖
தூலவுடல்சூக்ஷமதேகமதாய்- மேனி
துய்யநிறந்தசவாண்டினிலும்வினை
தாவிவருஞ்சூடுகனல்- ஓராண்டில்
தாபம்வருஞ்சோபமெத்தஅவிழ்தம்
போகமெனுங்காமத்தை- வாமத்திலேற்று
பொல்லாதமூதேவிசாதத்தைமாற்று
கோவித்துஅந்தியைச்சந்தியினில்தள்ளு- குற்பம்
வீணிலும்போகாதுடலூணியேகொள்ளு
நோயற்றுப்போக்கிவிடுஞ்சீரொத்துப் பாரு
வுன்னிதமாய்ப்பத்தியமுநிர்ணயமிதாண்டே-ஏலேலோ.
📖 பாடல் எண்: (1384) 📖
காலையிஞ்சியமுரியுண்ணு- தினமுங்
கடுக்காயும்புளியுமுண்ணு
அந்திமாலைசுக்குவிந்தமுரி- சேரு
மருவிநிற்கும்பூரணம்
பாலன்படும்பாடதும்பார்க்க- லொண்ணாது
பாழானபத்தியமும்பாகமதுகேளு
தூலமெனுவகைவசமாகவும்- வேணும்
சூதானபேதியதுமூன்றுதிங்களெய்தல்
மாலானபூரணமனோவின்ப- மாகும்
மதுதள்ளினாலிற்சந்தியதுவாகும்
நாலுபேர் அஞ்சிலுமடங்காது- பேதி
நமனுக்குமேலதிகநஞ்சதுகாணாண்டே- ஏலேலோ.
📖 பாடல் எண்: (1385) 📖
ஆறாந்தான்திங்களிலுந்- தேகம்
அசதிமெத்தஅரோசிகங்காண்
ஏழாந்தான்திங்களிலும்- உதிரம்
இறங்கும்பெரும்பாடானதுபோ
மெட்டுதிங்களினில்சீதளமுங்- காணும்
செய்கையொன்பதுதிங்கள்தேகமதுவாடும்
கூரானபேதியுடன்வாந்தியுங்காணும்
கூசாமலேடனையுஞ்சீதள சுரமெய்தும்
வீறானதோய்களதும்வேகமிகக்காணும்
விக்கலதுகக்கியுருமாறிவிடுமாகில்
நேரானகற்பமுறைபேராகச்- சொன்னேன்
நிச்சயமதாகுமிதுஅச்சமில்லையாண்டே-ஏலேலோ.
📖 பாடல் எண்: (1386) 📖
கடல்பெருகுஞ்சமுத்திரத்தில்- கப்பல்
கரையோரம்போகையிலும்பூத்த
மடல்பெருகும்பாய்மரத்தை- நன்றாய்
மடக்கிநடுமத்திபத்தில்சுக்கா
னுடல்தனில்வருகின்றசுவாசத்தைப்- பாரு
ஒன்பதுவாசலுங்கட்டியிருக்கும்
திடமுடனேகம்பத்தினுனியிலு- மேறித்
தீண்டாதமணிசுடரைத்தூண்டாமலேற்றி
புடம்வைத்துக்கருவிகளைக்- கட்டேயறுத்து
பூரணபஞ்சாக்ஷரபிரணவத்தைமூட்டி
நடுமரஞ்சுக்கானைமையத்திற்- பூட்டி
நாடியேமதுவுண்டுயான்பணிந்தேனே- ஏலேலோ.
📖 பாடல் எண்: (1387) 📖
மதியமிர்தமதுவமுரி- மதுரவாசி
யெனுஞ்சாரைவெள்ளைகற்பம்
நிதியகடுங்காரசுன்னம்- அப்பு
நிலவுபொழிஉப்பிதுதே
ரதிதவித அமுரியதுமுப்புவுமாச்சு
அமிர்தரசமானதுகள்ளுமதுவாச்சு
மதிரவியுஞ்சுவசத்திவாகியதிலாச்சு
வழலையறிபூரணமும்வஸ்துவெனுமாச்சு
பரிமளசுகந்தமலர்கெந்தமிதுவாச்சு
பகரறியசாந்துசவ்வாது புனுகாச்சு
துரியதுரியாதீதமுஞ்சுழியின்முனையாச்சு
சொப்பனமுஞ்சாக்கிரமுஞ்சுற்றிவலமாச்சே-ஏலேலோ.
📖 பாடல் எண்: (1388) 📖
காயகற்பமாண்டுசதம்- அதின்பின்
கடந்தபின்புவழலைமுறைமூல
சாயசரக்கெடுத்துலர்த்தித்- தயிலந்
தான்புடம்போட்டெடுத்தபின்பு
தனியமாயாமல்பார்க்கவுமனோன்மணியின்
விந்துமாணிக்கஒளிவதிதவலைமுப்பாகும்
தாயானகெந்திரசகாரசாரந்- தயில
மிதுகாலையுறசோருப்புடம்போட்டு
உபாயமதுவாகவொருகழஞ்சிடையுண்டு
முன்னுடலெதுக்குவொளிவாகுமதுகோடி
நயமாகப்போதமயமானந்தங்காட்டும்
நங்கென்றபூரணவிலாசத்தில்நின்றே- ஏலேலோ.
📖 பாடல் எண்: (1389*) 📖
முன்னான்கும்பன்னிரண்டில்கற்ப
முறைதவறுமனதுகந்துஉறுதி
அன்னாள்முதலப்பரத்தை- மிகவும்
அதிதமதாய்வளரும்விந்துவாசி
தூக்கியிறுக்கிச்சுருக்கியதைப்பாரு
சொன்னபடிகண்டமதிலூதிவிடுதாரை
தீர்க்கமுடன்செந்தணலைத்தாண்டியதுபாயுந்
தீபெஒளிப்பிரகாசதெரிசனமுமாகும்
மார்க்கமுடனாரறிவர்சொன்னேன்கருவாளி
மனதுஒருமித்துவைராக்கியமதுவாகக்
கார்க்கசிலம்பொலியோசைகாணுமதுயூபங்
கயிலாசபரகெதியில்காட்சிபெறுவாரே- ஏலேலோ.
📖 பாடல் எண்: (1390) 📖
இருபத்தோராயிரத்தறுநூறு- சுவாசம்
இறுக்கிகண்டதாரைதனில்சுருக்கி
கருத்துகந்தமூலக்கருக்குழியில்இருத்தி
கற்பமுண்டுவாசிகருதிடிலும்
சுழியிலுற்பனமதாகவொருஓங்காரநாடி
ஒன்றானகம்பத்தில்பாய்மரமீரெட்டு
விற்பனமதாகபதினாறுகயிறுபூட்டி
வீசிவிடுவாசியதைநாசிநுனிபாயா
சொற்பமதுசந்துகள் துவாரமதிலோடா
சொக்கிவிடலாகாதுசுவாசமதிலேறி
கற்பனைசுக்கானைரசக்கண்ணாடிபூட்டிக்
கருதியேவிடுசீனிகலப்பையதைநாட்டே-ஏலேலோ.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : June 2025
Next Post
👉 9️⃣7️⃣ ஞானவெட்டியான் (1391-1400) 👈