மனிதனுக்கு உள்ள ஒரு சிறப்பான பண்பு எல்லோருடனும் நட்பு பாராட்டுவது.
மனிதனுக்கு மட்டும் உள்ள பண்பு இது. ஒரு நாய் தன் இனத்தை சேர்க்காது. சில விலங்குகள் தன் இனத்தை அடித்து சாப்பிடும்.
மனிதனால் மட்டும் தான் விலங்குகளிடம் கூட நட்பு பாராட்ட முடியும். நாயை, பண்ணியை, பாம்பை, கிளியை , வண்டு, தேள் , பூரான் கூட பழக்கி வாழமுடியும்.
நான் என்னை இழக்காத பட்சத்தில் யாருடனும் நட்பு பாராட்டலாம்.
என் நண்பன் குடித்தாலும் சிகரெட் பிடித்தாலும் நான் அதை செய்யாமல் என்னை தர்க்காத்து பழகலாம். இவர்கள் அவர்கள் என்று இல்லாமல் எல்லோருடனும் நட்பு பாராட்டலாம்.
இப்படி தான் இருக்க வேண்டும் என்று இல்லை . எப்படி இருந்தாலும் நண்பன் நண்பன் தான்.
ஆனால் இந்த உயிரை கொடுப்பவன், நட்பை கூட கர்ப்பை போல எண்ணுவேன், என்று சினிமாவில் வரி கிடைக்காமல் எழுதி உள்ளனர்.நட்புக்கு கற்பு இல்லை.
கற்பு என்றால் சிறப்பாக வாழ்வது. கொண்டாட்டமாக வாழ்வது.
உங்களை தெரிந்து கொண்ட பிறகு தான் யார் கூட வேண்டுமானாலும் நட்பு பாராட்டலாம். ஏனெனில் நண்பர் காட்டும் வழியில் நீங்கள் சென்று விடுகிரீர். அவரை போல மாறுகிறீர்கள்.
உங்களுக்கான வடிவம் , சுய உருவத்தை, தன்மை தெரிந்து கொண்ட பின்பு தான் நட்புடன் பழக வேண்டும். நீங்கள் யார் என்று அறிவதற்க்கு முன்னர் நட்பு பாராட்டுவது ஆபத்தில் முடியும்.
உதாரணமாக 15, 16 வயதில் காமம் அரும்பும் போது உங்கள் கூட பழகுபவர்கள் எப்படி மிஷபேகவே (misbehave) செய்கிறார்களோ அது தான் உலகம் போல என்று நினைத்து கொள்வீர்கள்.
நான் யார்? எதற்கு வந்துள்ளேன்? என்ன செய்ய வேண்டும் என்ற திர்மானத்துக்கு வந்த பிறகு யார் கூட வேண்டுமானாலும் உறவாடலாம்.
கல்லூரியில் நட்பு என்ற பெயரில் ஏமார்ந்த அனுபவம் உங்களுக்கு இருக்கும்.
குழந்தைகள் சிகரெட் முதன் முதலில் நண்பன் பிடிக்கிறான் என்பதால் தான் தானும் புடிக்க ஆரம்பிக்கிறது. தானாக ஆராய்ச்சி செய்து பிடித்தது இல்லை.
உங்கள் நண்பனால் நீங்கள் மாறுகிறீர்கள். உங்கள் நண்பன் தியான வகுப்பை அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு அவன் நின்று விடுவான் நீங்கள் சென்று கொண்டு இருப்பீர்கள்.
நண்பர்களிடம் கவனமாக இருங்கள். அவர்கள் தான் உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கின்றனர் , உங்களை உங்களுக்கு தெரியாத வரை.
குழந்தையாக இருக்கும் போது நண்பர்களை தேர்ந்தெடுக்காமல் இருப்பது நல்லது. கல்வி முறையில் இதை போதிக்க வேண்டும். நாங்கள் வருங்காலங்களில் கல்வியில் சீர்திருத்தம் செய்ய வாய்ப்புள்ளது.