சந்தானம், கீர்த்தி, நல்ல வார்த்தை, தடையற்ற கொடை
- ஒவ்வொரு உயிரினமும் தன்னைப் போல் ஒன்றை உருவாக்கிவிட்டு போகும்போது முடிவுறுவது சந்தானம்
- சந்தானம் ஒரு நல்ல நூல், படைப்பாககூட இருக்கலாம், மரம் வளர்த்தாலும் சந்தானம்
- ஆரியர்கள் – தேறியவர்கள்
- சந்தானத்தை பொறுத்தே கீர்த்தி கிட்டும்
- மனதார சொல்லாத எந்த வார்த்தையும் கெட்ட வார்த்தை
- கீர்த்தி வந்தால் மாறாத வார்த்தை வரும்
- நான் அடையனும் மற்றவரும் அடைய உதவுவதே கொடை
- கடவுள் ஒன்றே ஒன்றுதான் அதற்கு பெயர்
சிவன், அல்லா, சூன்யம், வெட்டவெளி, பரப்பிரம்மம், சர்வவியாபி, நிர்குணன், நிர்மலன், சாந்தி, ஜோதி, சந்தானம்
- தானத்தில் சிறந்தது நிதானம்
- எவ்வளவு தூரம் சரியாகவும், எவ்வளவு தூரம் தெளிவாகவும், எவ்வளவு தூரம் உள்ளம் உங்களுக்கு உண்மையாகவும் இருக்கிறதோ அவ்வளவு தூரம் நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவராக மாறுகிறீர்கள்
- எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்
- உண்மையிலேயே வாழ்க்கை ஒரு போராட்டமல்ல கொண்டாட்டம்
- உன் கோலும் தடியும் என்னைத் தேற்றும்
- நல்ல வார்த்தையே ஒரு கொடை
- சாதியை ஒழிப்பதற்காக எழுதப்பட்ட நூலே மகாபாரதம்
- பதினாறும் பெற்றவருக்கே கொடை சாத்தியம்
- எல்லாமும் உனக்காகவே படைக்கப்பட்டிருக்கிறது
குரு சிவயோகி