தொலையாத நிதி, மாறாத செயல், துன்பமில்லா வாழ்க்கை
- ஒன்றிலிருந்து ஒன்று மாற்றிக்கொள்ள நிதி உதவுகிறது
- எல்லாவற்றிற்கும் பொதுவாகவும், நீதி செய்யவல்லதாகவும், பணமாகவும் உள்ளதால் அது நிதி எனப்படுகிறது
- எந்த தொழிலை தெரிந்து வைத்திருந்தாலும் அது தொலையாத நிதி, தொலையாத நிதியே செல்வம்
- முதல் செல்வம் கல்வியே இங்கு நிதியாக மாறுகிறது, முதல் செல்வமான கல்வியோடு மற்ற செல்வங்கள் சம்பந்தப்பட்டே இருக்கிறது
- எந்த வேலையை செய்தாலும் அதனை சிறப்பாக செய்ய வேண்டும்
- கைத்தொழில் ஒன்றினை கற்றுக் கொள், கவலை உனக்கு இல்லை ஒத்துக் கொள், எத்தொழில் எதுவும் தெரியாமல், இருந்திடல் உனக்கே சரியாமோ?
- எந்த தொழிலையும் நிதிக்காகவே செய்கிறோம், எதை செய்ய முடியாதோ அதற்காக நிதியை செலவு செய்கிறோம்
- நிதிக்காக தொழிலை செய்யவேண்டி இருந்ததால் மரபு வழி சாதி வழி பிரிவுகள் ஏற்பட்டுவிட்டது
- செல்வம் பிரதானமானால் யாரும் எந்த தொழிலையும் செய்யலாம்
- நிதி திரட்டவேண்டுமெனில் செயல்பட வேண்டும், அந்த செயலும் சிறப்பாக இருக்க வேண்டும், உங்களுக்கு தொல்லை இல்லாத செயலாக (கர்மா), எந்த மனிதனுக்கும் துன்பம் தராத செயலாக இருக்க வேண்டும்
- பயிரை அறுத்தாலும், ஆடை அறுத்தாலும் ஒன்றுதான், இரண்டுமே விவசாய பண்ணையிலிருந்துதான் வருகிறது
- நிதி கட்டாயம் தேவையெனில் செயல்படுவோம்(தொழில்), நாலு பேருக்கு உதவும் தொழில், செயல் புரிந்துவிட்டால் துன்பமில்லா வாழ்வு
- ஆன்மிகம் என்றால் கொண்டாட்டம், சுதந்திரத்தின் உச்சம், முழு விழிப்பு நிலையில் வாழ்வது
- சாதிக்கு அப்பாற்பட்டது ஆன்மிகம், கடவுளுக்கு எந்த மதமும் இல்லை
- யேசுநாதர் பிறப்பால் யூதர், வாழ்ந்தது மனிதனாய்
- சாப்பிடும் சாப்பாட்டில் சைவம், அசைவம் இல்லவே இல்லை
- முடி வெட்டுதல், அடுத்தவங்க துணி துவைப்பது, காலை பிடித்து விடுவது, மலம் போகும் இடத்தின் அடைப்பை எடுப்பது புனிதமான தொழில்
- செயல்கள் செய்யும்போது நஷ்டமில்லாமால் நேர்த்தியாக செய்ய வேண்டும்
- பதினாறு செல்வங்களோடு வாழ்பவன் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன், பதினாறு செல்வம் பெற்ற யாரும் தெய்வம்தான்
- கல்வியை தேடி போனால் நட்பு வரும், நட்பு வந்தால் வளமை வந்துவிடும், வளமையானால் இளமை வந்துவிடும், இளமையானால் வயது வந்துவிடும், வயது வந்தால் பக்தி வந்துவிடும், பக்தி வந்தால் உடல் ஆரோக்கியம், சலியாதமனம் மற்றும் மற்ற செல்வங்கள் அனைத்தும் வந்துவிடும்
- பதினாறு செல்வங்களை பெற முதலில் கல்வி வேண்டும் அந்த கல்வியை தர சிவயோகி வேண்டும்
- ஒரு நல்ல குரு கல்வி தருகிறார் அதனை அடையும் சீடன் பதினாறு பேறும் பெற்றிடுவான், பதினாறும் பெற்றால் தெய்வம் ஆகலாம்
- நீதான் மூலதனம், உன்னிலிருந்தே தொடங்கு
- வேலை இல்லாமல் கஷ்டப்படும்போதுதான் வேலையோட அருமை தெரியும், எல்லாமே வேலை என்று புரியும்
- வாழ்க்கை என்பது மற்றவருக்கு காட்டுவது இல்லை, பரஸ்பரம் அன்பாக, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்வது
- வாழ்க்கை மனிதனுக்கு மட்டும்தான் விலங்குகளுக்கு இல்லை, நன்றாக சாப்பிட்டு, கணவன் மனைவியாக, நல்ல குழந்தை பெற்று படிக்கவைத்து சீரும் சிறப்புமாய், பேறும் புகழுமாய் வாழவேண்டும்
- ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து வாழவேண்டாம், புரிந்து கொண்டு வாழுங்கள், எந்த காரணத்தைக் கொண்டும் உங்களை விட்டுவிடாதீர்கள், துணையையும் விட்டுவிடாதீர்கள்
- உங்களை துன்பப்படுத்துவதற்காக ஒரு உறவை(துணையை) கடவுள் ஏற்படுத்தி தரவில்லை, நீங்கள் துன்பப்படுவதற்காக ஒரு உறவை வைத்திருக்கிறீர்கள்
- ஆணாக இருந்தாலும்சரி பெண்ணாக இருந்தாலும்சரி வாழ வேண்டியது அவர்களோட வேலை, வாழ கற்றுக்கொள்ளுங்கள்
- யாருமே அவர்களாக மாறவேண்டுமே தவிர நீங்கள் மாற்ற முடியாது
- நல்ல கணவனாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கணவனுக்கும், நல்ல மனைவியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மனைவிக்கும் இரண்டு பேருக்குமே பரஸ்பரம் இருக்க வேண்டும்
- நீ தூங்குவதில், நீ எழுந்திருப்பதில், நீ சாப்பிடுவதில், நீ செயல்படுவதில் யாருக்காகவும் சமரசம் ஆகாதே
- சிறப்பான வாழ்வு என்பது என் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வது, மேலும் என்னால் நாலு பேரின் தேவைகளை நிறைவேற்றுவது, வாழ்தல் என்பது பதினாறு செல்வங்களை பெறுவதாகவும் அதுவே உன் இலக்காகவும் இருக்க வேண்டும்
- கல்வியிலிருந்து வாழ்வை பெறலாம், நன்றாக வாழ்ந்தும் கல்வியை பெறலாம், அந்த காலத்தில் முதலில் கல்வியை கொடுத்தார்கள்
- பதினாறு பேறுகளில் கல்வியிலிருந்து தொடங்கி துன்பமில்லா வாழ்க்கை வரை பெறலாம் அல்லது துன்பமில்லா வாழ்க்கையிலிருந்து கல்வி வரை பெறலாம்
- முயற்சி செய்தேன் கிடைக்கவில்லை என்று சொல்லாதீர்கள், உங்கள் முயற்சி போதுமானதாக இல்லை என புரிந்துகொள்ளுங்கள்
- நீங்கள் கொடுத்தாலொழிய உங்கள் வாழ்க்கையை உங்களிடமிருந்து யாரும் பிடுங்கிக்கொள்ள முடியாது
- காலம் மட்டுமே நில்லாது ஓடிக்கொண்டே இருக்கிறது, கவனமாக இரு, காலத்திலேயே பதினாறு பேறு அடைந்துவிடவேண்டும்
- இளமையிலும் கற்க முடியும், முதுமையிலும் கற்க முடியும், எங்கிருந்து வந்தேன்? எங்கு போகப்போகிறேன்? ஏன் பிறந்தேன்? ஏன் இருக்கிறேன்? ஏன் வாழ்கிறேன்? ஏன் சாகப்போகிறேன்? எப்படி சாகனும்? என்ற இந்த அடிப்படைகளை தெரிந்து கொள்ளாமல் வாழ்வது வாழ்க்கையா?
- ஏன் பிறந்தேன்? ஏன் இருக்கிறேன்? ஏன் சாகப்போகிறேன்? இந்த மூன்று கேள்விகளுக்கான பதிலே ஞானம்
- எப்படியெல்லாம் இருக்கலாம் என்பதற்காகவே இந்த பதினாறு பேறு, பதினாறு பேறு பெற்றால் சரியாக சாவீர்கள், சமாதி சாதிக்கலாம், தெய்வமாக இருக்கலாம்
- தமிழ்க்கூறும் நல்லுலகில் பதினாறு பேறுகளை பெருமைக்குரியதாக வகுத்து வைத்து இருக்கிறார்கள், எந்த விஞ்ஞானமும் எட்டாத இடத்தில் தமிழ் மக்கள் வாழ்ந்துவிட்டு போயிருக்கிறார்கள், இந்த இடத்தில் நான் பிறந்ததிற்கு பெருமைபட்டுக்கொள்கிறேன்.
- கடவுள் ஒன்றுதான், ஒன்று அவன்தானே என்று கூறும் நூலை பத்தாவது இடத்தில் வைத்து இருக்கிறார்கள், உண்மையை எங்கும் மறைத்து வைக்க முடியாது, உண்மை எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கிறது,
- திரும்பவும் சொல்கிறேன் இங்கு நீதான் விஷேசம், உன்னைவிட ஒரு விஷேசத்தை வெளியில் தேடாதே, உண்மையை உள்ளே வைத்துக்கொண்டு வெளியில் தேடுவது அபத்தம் பைத்தியக்காரத்தனம், உன்னை உனக்கு சொல்லிக்கொடுப்பவரே குரு
- பதினாறு பேறும் உன்னுடையது, இங்கு நீதான் பெறவேண்டும், யாரும் எடுத்துவந்து கொடுக்கமாட்டார்கள், கேட்டால்தான் பெறுவாய்., முடிந்தளவுக்கு பதினாறு செல்வங்களை சீக்கிரமாக பெறுங்கள், விரைவில் அடையப்பாருங்கள்.
குரு சிவயோகி